VideoBar

This content is not yet available over encrypted connections.

Thursday, December 21, 2017

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 -2020.சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 -2020.
(எட்டயபுரம் விஜயநரசிம்மன்.)
சனி ஒரு கிரகமான கதை
         காலத்தின் தொடக்கத்தில் சூரியன் இருந்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சூரியன் "சஜ்ஜனா" வை மணந்தான். திருமணம் முடிந்ததும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை எதிர்பார்த்த சூரியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், சூரியனின் தாங்க முடியாத வெப்பத்தை அவளால் தாங்கமுடியவில்லை. எனினும் இத் தம்பதிகளுக்கு ஆண் இரண்டும், பெண்ணொன்றுமாக மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தவனுக்கு ºவைவஸ்வத மனு" - என்றும், பின்னர் பிறந்த இரட்டையருக்கு "எமன் –யமி" என்றும் பெயரிட்டனர்.
         சூரியனின் உஷ்ணத்தைத் தாங்க முடியாத "சஜ்ஜனா"வுக்கு வாழ்க்கையே போதுமென்றானது. தன்னைப் போன்ற உருவம் கொண்ட "சாயா"விடம் (நிழல்) தன் குழந்தைகளைப் பேணிக் காப்பாள் என்ற உறுதி மொழியைப் பெற்றுக் கொண்டு, சூரியனோடு வாழுமாறு கேட்டுக் கொண்டாள். பின்னர், "சஞ்சனா“ பெண் குதிரையாக மாறி சூரியனைப் பிரிந்து சென்றாள். இவர்களின் இந்த சதித் திட்டத்தை சூரியன் அறியவில்லை. "சாயா" சஞ்சனாவின் குளிர்ந்த நிழல் ஆதலால் சூரியனின் வெப்பத்தைத் தாங்கி வாழமுடிந்தது. அவர்களுக்கும் குழ்ந்தை பிறந்தது. அதன் பிறகே சிக்கல்கள், கஷ்டங்கள் தொடங்கியது.
         "சாயா" தனக்கென குழந்தைகள் பிறக்காதவரை, "சஞ்சனா"வின் குழந்தைகளுக்கு சிறந்த தாயாக விளங்கினாள். பின்னர், தனக்கென "சனி, ஸுவர்ண மனு" - என்ற இரு மகன்களும், "தபதி" - என்ற மகளும் பிறந்ததும், சஞ்சனாவுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டாள். சித்தியின் கொடுமை கண்ட "எமன்" அவள் மேல் வெறுப்பும், கோபமும் கொண்டு எட்டி உதைத்தான். அவளும் அவன் இடது காலை இழக்கக் கடவது என சபித்தாள். எமனும் தந்தையிடம் நடந்ததைக் கூற  சூரியன் கண்டித்த போது, உண்மைகளைப் போட்டு உடைத்தாள், "சாயா". கோபமுற்ற சூரியன் சஞ்சனாவைத் தேடி தன் ஞானதிருஷ்டியால் அவள் குதிரையானதை அறிந்து, அவரும் குதிரையாக மாறி இருவரும் இணைந்தனர். பின்னர் பிறந்த இரட்டையரே தேவர்களுக்கு மருத்துவர்களான "அஸ்வின் குமாரர்கள்" ஆவர். சூரியனின் வெப்பத்தைக் குறைக்க சஞ்சனாவின் தந்தையான "விஸ்வகர்மா" தனது பொறியாளர் மூளையை உபயோகித்து வட்டவடிவமான ரம்பத்தால் சூரியனின் விட்டத்தைக் குறைத்தார். அவர் வெட்டும்போது சிதறுண்ட துண்டுகளே கிரகங்கள் ஆயின. சனி சூரியனின் மகனாதலால் அவரும் கோள்களில் ஒருவராக இணைந்தார். இதுவே சனி கிரகமான கதையாகும். தன் தாய் சாயாவை வெளியேற்றியதால் கோபமுற்ற சனி சூரியனைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, சனி தனது தந்தையை நிரந்தர எதிரியாகவே கருதினார். கொள்களில் மிகவும் கசப்பான பகை உடையவர்கள் தந்தையும் மகனுமே ஆவர்.
        கோசார பலன்களை ஒரு வழிகாட்டியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டது போல்கேட்பதற்கு இனிமையாக சத்தியத்தைச் சொல்லுசத்தியம் அல்லாததை ஒருபோதும் சொல்லாதேஅந்த சத்தியமும் கேட்பதற்குநாராசமாக இருக்கக் கூடாதுமேலும் பயம் விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடாது.” அதாவது ஓரு ஜாதகத்தைப் பார்க்கும்ஜோதிடன்அவனுக்கு அனேக விஷயங்கள் தெரிந்திருந்தாலும்எதைச் சொன்னால் பலன் கேட்பவனுக்கு அதைத் தாங்கும் சக்திஉண்டோ அதை மட்டும் தான் சொல்ல வேண்டும்உண்மையான ஜோதிடன் அதை மட்டுமே சொல்வான்இதைக் கேட்டுவிட்டுஜோதிடனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணிவிடக் கூடாதுஅதே நீதியின் அடிப்படையில்தான் இங்கு பலன் உரைக்கப்பட்டுள்ளது.
                                                                                                                                                                                               


சுக்
குரு

சூரி,சனி


ஹேவிளம்பி
மார்கழி -4
19-12-2017
செவ்வாய்
காலை மணி
 9-59 தனுசு சனி.
இராசி
   

இராகு
ராகு


   நவாம்சம்
சந்,லக்
கேது,லக்புத,
செவ்
கேது

சூரி,
சந்,சனி
புத,சுக்

செவ்,
குரு       இந்த ஆண்டு வாக்கிய கணிதப் பஞ்சாங்கப்படி ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 4 ஆம் தேதிக்கு இணையான ஆங்கில தேதி 19 - 12  2017 – செவ்வாய்க் கிழமை நாழிகை 8-45 காலை மணி 9 – 59 க்கு கேட்டை நட்சத்திரம் 4 ஆம் பாதம் விருச்சிக இராசியில் இருந்து மூல நட்சத்திரம் தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  
சனி காயத்ரி –  "ஓம் காகத்வஜாய வித்மஹே
                   கட்க ஹஸ்தாய தீமஹி
                   தந்நோ மந்தப் ப்ரச்சோதயாத்"
சனி பகவான் ஸ்தோத்திரம் –
                   நீலாஞ்சன ஸமா பாசம்
                   ரவி புத்ரம் யமாக்ரஜம்
                   சாயா மார்த்தாண்ட சம்பூதம்
                   தம் நமாமி சனைச்சரம்"

2017 – 2020 மூர்த்தி நிர்ணயப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள்.

         ஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் சந்திரன் வருகிறதோ , அந்தக் கணக்கின் படி சுவர்ணம்  (தங்கம்)  ரஜதம் (வெள்ளி),  தாமிரம்  (செம்பு) மற்றும் உலோகம் ( இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்.

   கிரகப் பெயர்ச்சியன்று -

         ஜென்ம இராசிக்கு 1,6,11 இல் சந்திரன் இருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.
         அசுப கோள்களான சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன், பாப நோக்கு சம்பந்தம் பெற்ற புதன், இராகு, கேது இவர்கள் மூர்த்தி பேதத்தால் பலன் அளிக்கும் அளவு கீழ்க்கண்டபடி வேறுபடும். ரஜத மூர்த்தி- முழுச் சுபம், தாமிர மூர்த்தி – முக்கால் சுபம், உலோக மூர்த்தி – அரைச்சுபம், சுபக்கிரகங்களுக்கு முழுச் சுபம் கொடுத்த சுவர்ண மூர்த்தி கால் சுபராகவும் செயல் படுவர்.

இராசி
சுப/அசுபத்
தன்மை
சனி இருக்கும்
பாவம்/பொது
விதி
அளவு
1
சிறப்பு விதி
மூர்த்தி
நிர்ணயம்
அளவு


2
மொத்த
அளவு
1 + 2
பலன்
அளவு
பலன்
மேஷம்
 9 இல் சந்
அசுபம்
9
ரஜத
மூர்த்தி
0.500
0.500
1/2

நன்மை
ரிஷபம்
 இல் சந்
அசுபம்
8
உலோக
மூர்த்தி
0.125
0.125
1/4
சுமார்
மிதுனம்
 இல்சந்
அசுபம்
7
தாமிர
மூர்த்தி
0.250
0.250
¾
 நன்மை
கடகம்
6 இல்சந்
சுபம்
6
0.500
சுவர்ண
மூர்த்தி
0.0625
0.5625
½+

நன்மை
சிம்மம்
 இல் சந்
அசுபம்
5
ரஜத
மூர்த்தி
0.500
0.500
1/2

நன்மை
கன்னி
 இல் சந்
அசுபம்  
4
உலோக
மூர்த்தி
0.125
0.125
1/4
சுமார்
துலாம்
இல் சந்
சுபம் 
3
0.500
தாமிர
மூர்த்தி
0.750
0.750
3/4

நன்மை
விருச்சிகம்
இல்சந் 
அசுபம்
2
ரஜத
மூர்த்தி
0.500
0.500
1/2

நன்மை
தனுசு
இல் சந் 
அசுபம்
    1

சுவர்ண
மூர்த்தி
0.0625
0.0625
1/16
 தீமை
மகரம்
12இல் சந்
அசுபம்
12
உலோக
மூர்த்தி
0.125
0.125
¼
சுமார்
கும்பம்
11 இல் சந்
சுபம்
11
0.500
சுவர்ண
மூர்த்தி
0.0625
0.5625
½+
நன்மை
மீனம்
10 இல் சந்
அசுபம்
10
தாமிர
மூர்த்தி
0.250
0.250
3/4

நன்மை           சனி இம்முறை பொது விதிப்படி கடகம்(6), துலாம் (3), கும்பம்(11),  ஆகிய மூன்று இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார்.

       ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமை தரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம்.

         சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது அமைவதைக் காணலாம்.

        கடகம் -    சுவர்ண மூர்த்தி ஆவதோடு சுபமும்  அளிப்பதால்  நன்மை ஏற்படுகிறது.ஓரளவு குறைகிறது. (6) 95%

         துலாம் -   தாமிர மூர்த்தி + சுப இராசியாவதால் அவர்  நன்மை அளிக்கிறார். (3) 95%

        கும்பம் -  சுவர்ண மூர்த்தி + சுபம் தரும் பாவமாவதால் அவர் நன்மை அளிக்கிறார். (11) 95%

      சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படி தீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம்.  சனி இம்முறை  கடகம்,  துலாம், கும்பம் தவிர மற்ற இராசிகளில் அசுப்பலன் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று சில இராசிகளுக்கு நன்மையாக மாறுவதைக் காணலாம்.

        மேஷம் - ரஜத மூர்த்தியாவதால் முழு சுபராகி நன்மை அளிக்கிறார். (9) 90%
      ரிஷபம் – உலோக மூர்த்தி ஆவதால் கால் சுபராகி சுமாரான பலன் அளிக்கிறார். (8) 50%
      மிதுனம் - தாமிர மூர்த்தி ஆவதால் முக்கால் பங்கு சுபராகி நன்மை அளிக்கிறார்.(7) 75%
      சிம்மத்திற்கு -  ரஜத மூர்த்தியாக இருப்பதால் முழு சுப பலன் ஏற்படும். (5) 90%
      கன்னி -  உலோக மூர்த்தியாகி அரை சுபராக சுமாரான பலன்களே ஏற்படும்.(4) 60%
      விருச்சிகத்திற்கு -  ரஜத மூர்த்தியாக இருப்பதால் முழு சுப பலன் ஏற்படும். (2)
80%
      தனுசு – சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் கால் சுபராகி தீமையான பலன்களே தர வல்லவர். (1) 40%
      மகரத்திற்கு -  உலோக மூர்த்தியாக இருப்பதால் அரை சுப பலன் ஏற்படும்.(12) 60%
      மீனத்துக்கு -  தாமிர மூர்த்தியாக இருப்பதால் முக்கால் சுப பலன் ஏற்படும் (10)80%

      கடகம், தனுசு, கும்பம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி முறையே சுவர்ண மூர்த்தியாக இருந்தாலும் சுபம் தரும் இராசிகளில் இருப்பதால் சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.     

       மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

       மிதுனம், துலாம், மீனம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

       ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.     

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
       தைரிய காரகனானசெவ்வாயை அதிபதியாகக்கொண்டு, மற்றவர்களுக்கு உதவும் குணமும், ஆவேசம், குறிக்கோள், அஞ்சாமை, தைரியம், பிடிவாதம் ஆகிய குணங்களைக் கொண்டமேஷராசி அன்பர்களேதங்கள்இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12  2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. மேஷ இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப்பார்ப்போம்.

       இதுநாள் வரை சனி பகவான் உங்கள் இராசிக்கு அட்டம ஸ்தானத்தில் இருந்து அல்லல்கள் தந்து, தொழிலில் முன்னேற்றமும், அதிக இலாபங்களையும் வழங்கினாலும், தடங்கல்களையும், தொழிலில் போட்டி பொறாமைகளையும் ஏற்படுத்தி வந்தார். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகளையும், பொது வாழ்வில் அவமானங்களையும் கொடுத்து வந்தார். தற்சமயம் பாக்கிய ஸ்தானமான தனுசு இராசிக்குப் பெயர்ச்சி ஆகியுள்ளார். இது சாதகாமான அமைப்பு அல்ல. ஆயினும் குருவின் ஆட்சி வீடாக இருப்பதால் பல நன்மைகளும் ஏற்படும். பண்டைய தமிழ் நூல்களின்படி சனி பாக்கிய பாவத்தில் நல்ல பலன்களே அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சிலருக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். புதிய பெண்களின் தொடர்புகள் ஏற்படும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார். பலவகையான உயர்ரக வாகனங்கள் அமையும். பிறருக்குக் கட்டளையிடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். இராகுவின் அர்த்தாஷ்டம நிலை காரணமாக அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் வடமொழி நூல்கள் அசுப்பலன்கள் ஏற்படும் என்றே கூறுகிறது. அதன்படி பணம் வீணாகச் செலவாகும். புண்ணிய தர்ம காரியங்கள் தடைப்படும். வாகனத்தில் ஏற்படும் பழுதுகளைச் சீர் செய்ய வேண்டிய  வகையில் பராமரிப்புச் செலவுகள்  ஏற்படலாம். சொத்து பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உயர் கல்வி பயில்பவர்கள் வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் எச்சரிக்கையாக இருந்தால் தேரலாம். மருத்துவரின் கவனக் குறைவால் வேண்டாத பிரச்சனைகள் எழலாம். நண்பர்களும் பகைவராவர். யாத்திரையின் போது எச்சரிக்கை தேவை. இத்தகைய பிரச்சனைகளால் தூக்கம் குறையும் கவலைகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் தரகர்களை நம்பாமல் அவற்றின் தஸ்தாவேஜூகளை அலசி, ஆராய்ந்து முடித்துக் கொள்வது நல்லது. சிலருக்கு இதுவரை இழுபறியாய் இருந்த காரியங்கள் வெற்றி அடையும். புதிய முன்னேற்றத்துக்கான பாதைகள் வகுக்கப்படும். தொழிலில் இலாபமும், உத்தியோகத்தில் உயர்வும் ஏற்படும்.புண்ணயத்தல யாத்திரைகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். மேஷம இராசிக்கு - ரஜத மூர்த்தியாவதால் முழு சுபராகி நன்மை அளிக்கிறார். (9) 90%.இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

                   
       குடும்பம் மற்றும் பொருளாதாரம் – கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். அசையும், அசையாச் சொத்துக்களால் வீண்செலவுகள் ஏற்படும். தேவைக்கேற்ற பணவரவுகள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப் பிறகு வெற்றி ஏற்படும். கொடுக்கல் – வாங்கலில் சரளமான நிலை ஏற்பட்டாலும், பெரிய தொகைகளைக் கையாளும் போது எச்சரிக்கை தேவை.

       தொழில் மற்றும் வியாபாரம் – தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குச் சிறப்பான காலம். இலாபம் அதிகரிக்கும். போட்டி, பொறாமை காரணமாக, எதிராளிகள் தரும் இன்னல்களை எப்பாடுபட்டாவது சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைத்து தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். அலைச்சல்களைத் தவிர்க்க பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

       உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கினை, உதவியாளர்களின் உதவியோடு சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பர். பணியிடத்தில் நிலவிய பாதகமான நிலைகள் மாறி மீண்டும் பணியில் உற்சாகம் பிறக்கும். திறமைக்கு ஏற்ப பாரட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு, குடும்பத்தினரைப் பிரிய நேரலாம்.

       பெண்களுக்கு – அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புப்புடன் செயல்பட்டாலும், சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். புதிய முயற்சிகள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கூடிவரும். மணமாகாதவர்களுக்கு அவர்கள் எண்ணப்படி நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். நினைத்தபடி நினைத்த காரியங்கள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு காரணமாக போதுமான அளவு ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படலாம். புத்திர பாக்கியம் ஏற்படும்.

      அரசியல்வாதிகளுக்கு – பொருளாதார நிலை சீராக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த சிக்கல்கள், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமுக நிலை உருவாகும். தொண்டர்களின் ஆதரவு பெருகினாலும், கட்சிப் பணிக்கான செலவுகள் எகிறும். பொதுமக்களின் ஆதரவு குறையும். பொதுமக்களுக்கு அரசு மானியங்கள், உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கட்சியில் தங்கள் செல்வாக்கு முன்பு இருந்ததைவிட அதிகரிங்கும்.

       மாணவர்களுக்கு – கல்வியில் இடர்பாடுகளைக் களைய மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளாவிடில் பின்னர் வருத்தப்பட நேரும். எனவே, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தகவல் தொழில் நுட்ப அமைப்புகளில் நேரத்தை வீண்டிக்காது இருப்பது நல்லது. நல்ல நண்பர்களின் நெருக்கம் மகிழ்ச்சி அளிக்கும். கல்விச் சுற்றுலாக்களின் மூலமாக அறிவு விருத்திக்கான சூழல் மாணவர்களுக்கு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் வெற்றிக்கான பதக்கங்களும், பட்டயங்களும் கிடைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.

       கலைஞர்களுக்கு – புதிய தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். நல்லமுறையில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கை கொடுக்கும். தேவைக்கு அதிகமான வருமானம் வருவதால் மகிழ்ச்சி பொங்கும். ஆயினும், வருமானவரித்துறையின் கெடுபிடிகள் தொல்லை தரலாம். முதன்மை நிலைக்கான போட்டிகளால் கலைத்துறை சூடு பிடிக்கும். புகழ் மிக்கவர்களின் பெயர் கெடும் வகையில் கிசு கிசுகள் மீடியாக்களில் வைரலாகும். 

       பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக இலாப பாவத்தையும், 7 ஆம் பார்வையாக தைரிய, வீரிய பாவத்தையும், 10 ஆம் பார்வையாக ருண, ரோக, சத்ரு பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.

         3 ஆம் பார்வையாக 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இதுநாள்வரை உங்கள் நிறைவேறாத ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் ஆகியவை கிடைக்கும். தெய்வ வழிபாடுகளுக்காக பல புனித ஸ்தலங்களுக்கு சென்று வர வேண்டிய பாக்கியம் கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகள் முன்னின்று உதவுவர். ஒதுங்கிச் சென்ற நண்பர்கள் ஓடி வந்து கை கொடுப்பர். நேர்மையான எண்ணங்களால் வாழ்க்கைத் தரம் உயரும். வீட்டில் சுபகாரியங்கள் நிறைவேறும். போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள்  கதவைத் தட்டும். புதிய தொழில் முயற்ச்சிகள் ஆதாயம் தரும். மாணவர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு பள்ளிக்குப் பெருமை சேர்க்க பல பரிசுகளை அள்ளி வருவர். தம்பதியரிடையே அன்யோன்யம் ஏற்பட்டு மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அனுபவிப்பர்.  

         7 ஆம் பார்வையாக சகோதர பாவத்தைப் பார்க்கும சனி பகவான் எதிலும் தைரியமாக இறங்கி வேலை செய்து தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி வாகை சூடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த சகாயங்கள், உதவிகள் அனைத்தும் கிடைக்கும். சிலர் உறவுகளை விட்டு விலக நேரும். இடமாற்றங்களும், இருப்பிட மாற்றங்களும் ஏற்படலாம். அன்னையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்ளுங்கள். மாணவர்கள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள மனதை ஒருநிலைப் படுத்த முயற்சிக்க வேண்டும். புதிய வீடு, வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். தகவல் தொடர்புகளில் முன்னேற்றம் இருக்கும். நல்ல சேதிகள் கிடைக்கும். உங்களின் நல்லெண்ணங்கும், செயல்களும் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அளிக்கும். உழைப்பு அதிகமாகி ஓய்வெடுக்க முடியாமல் சோர்வு உண்டாகும். எனவே, வேளாவேளைக்கு நல்ல விதமான சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் வலிமையை அதிகரித்துக் கொள்வது அவசியம். சிலருக்கு அதன் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.

         10 ஆம் பார்வையாக ருண, ரோக சத்ருஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். சேவை ஸ்தானமாகையால்  அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்பதவிகள், பணிமாற்றங்கள் ஆகியவை நினைத்தது நினைத்தபடி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் அனுசரணையால் உங்கள் அந்தஸ்து, பெருமை உயரும். இதுநாள்வரை இருந்து வந்த முக்கிய அலுவலகப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதனால் உள்ளுக்குள் மகிழ்ச்சியும் நிலவும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அலுவலகப் பணிகளை விரைந்து முடித்துவிட்டால் புதிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். பணி நிமித்தமான வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் அடைவீர்கள். வயிற்று உபாதைகள், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கடன்களும் கூட, வருமானமும் கூடும்.

         பரிகாரங்கள் – திருநள்ளாறு திருத்தலம் சென்று நள தீர்த்தத்தில் புனித நீராடி  சனி பகவானுக்கு எள் விளக்கேற்றி அர்ச்சனை செய்துவர நலம் பயக்கும். எந்த காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னும், விக்ன விநாயகரை வணங்குதல் நலம். சங்கட ஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது நல்லது. ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்வதும் நலம் பயக்கும்.