Sunday, May 20, 2018

ஜாதகம் 12 & 13





ஜாதகம் 12 & 13






ஜாதகம் – 12
         இந்த ஜாதகத்தில் (12) சனி நீசம். சனியின் செவ்வாயுடனான பரிவர்த்தனையால் சனி தன் சொந்த வீட்டில் இருப்பதாகிறது. அங்கு குருவும் இணைந்துள்ளது.  இதனால் ஜாதகர் தன் பணியில் வேறு இடத்திற்கு மாற்றம் பெற்று அங்கே அவருக்கு சிறந்த வரவேற்பும், கௌரவமும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரம்ப காலத்தில் வரும் கஷ்டங்களை சமாளித்து சுமாரான வேலையை அடையும் இவர் பின்னர் வேறு இடத்திற்கு மாற்றம் பெறும் போது புதிய இடத்தில் அவர் போற்றப்படுவார். இதற்குக் காரணம் பரிவர்த்தனையே ஆகும். கர்மகாரகன் சனி கௌரவம், மதிப்பு மரியாதைக்கு உரிய கிரகமான குவுடன் தொடர்பு கொள்ளும் போது இது சாத்தியப்படுகிறது.





சனி
சந்

செவ்
குரு
உ. ஜா. 12
சுக்
இராகு

கேது








        


 ரிஷபத்தில் உள்ள சந்திரன் உச்சம். அவர் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் அங்கு தனது பரம வைரியான இராகுவுடன் சந்திரனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அதனால், இந்த ஜாதகருடைய தாய் பயத்தாலும், சளி மற்றும் மூட்டுவலியாலும் கஷ்டப்படுகிறார். ஜாதகரும் மனதில் ஒரு மாயத் தோற்றத்துடனும், பிரமையுடனும், ஏமாற்றத்துடனும் துன்பப்படுகிறார்.
         இதுவரை, உச்ச கிரகம் எங்ஙனம் தனது பலத்தை இழக்கிறது, நீச கிரகம் எப்படி பங்கம் அடைகிறது என்பதற்கான முழு விவரங்களையும் அறிந்தீர்கள் அல்லவா ?
         ஜாதகம் - 13



இராகு

சூரி,புத
செவ்,சந்
சுக்.

உ. ஜா. 13
குரு





கேது
சனி


இந்த ஜாதகத்தில் (13) குரு உச்சம் பெற்றிருந்தாலும், அதற்கு  2, 12 மற்றும் 7 ஆம் இடங்களில் ஒருகிரகமும் இல்லாததால் , உச்ச குருவால் ஜாதகருக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படாது.
         சனி உச்சமாகி, அதற்கு அடுத்துள்ள 2 ஆம் வீட்டில் செவ்வாய்க்கு நண்பரும், சனிக்கு பரம வைரியுமான கேது உள்ளார். சனிக்கு 12 ஆம் வீட்டிலும், 7 ஆம் வீட்டிலும் கிரகங்கள் இல்லை. இதன் காரணமாக உச்ச சனியால் ஜாதகருக்கு எந்தவித பயனும் இல்லை. எனவே, ஜாதகருக்கு தொடர்ந்து வேலைகள் இன்றி விட்டு விட்டே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன் உலக பந்தங்களில் இருந்து விடுபடும் எண்ணமே இருந்தது. அத்துடன் இராகு – கேதுக்களுக்கு ஒருபுறம் குருவும், சனியும் இருக்க, மறுபுறம் மற்ற கிரகங்கள் இருப்பதால் ஜாதகர் தான் இருக்கும் இடத்தைவிட்டு வெகுதூரத்தில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. அங்கு அவர் வேலையில் பல கஷ்டங்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
ஜாதகம் - 14
சுக். சந்
சூரி




கேது

உ. ஜா. 14
குரு
சனி



இராகு





         இந்த ஜாதகத்தில் (14) குரு உச்சமாகி, அவருக்கு 12 ஆம் இடத்தில் கேது உள்ளார். 7 ஆம் இடத்தில் சனி உள்ளார். இராகு தனது கடிகார சுற்றுக்கு மறு சுற்றாக நகரும்போது முதலில் குருவை தொடுகிறார். ஆனால், கேது வெளியில் இருக்கிறது. இராகு முதலில் ஜீவன் காரகன் குருவைத் தொடுவதால் ஜாதகர் குழந்தைப் பருவத்திலேயே பாலாரிஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், குரு, சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் அங்கு ஆத்ம காரகன் சூரியனைத் தொடர்பு கொள்கிறார். இதன் காரணமாக மரணத்தின் பிடியிலிருந்து கடவுளின் அருளால் ( சூரியன் = தெய்வீகத் தன்மை ) விடுபட்டுவிடுகிறார். இந்த கிரக நிலைகளால் தீய பலன்கள் மாறி நன்மை ஏற்படுகிறது. இது பக்த மார்க்கண்டேயனின் ஜாதகமாகும்.

                                       

No comments:

Post a Comment