Sunday, May 6, 2018

திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்பட்டு, பூமியில் புனிதமாகிறது.




திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்பட்டு, பூமியில் 

புனிதமாகிறது.

       கல்யாணத்தின் காலநிர்ணயம், கன்னியை முதலில் காணும் போது தொடங்குகிறது. இதையே நாம் பெண் பார்க்கும் படலம் என்கிறோம். இது நடைபெறும் காலமானது, கோசாரத்தில் இலக்னாதிபதியும், 7 ஆம் அதிபதியும், இணைவு, பார்வை,  சமசப்தமத்தில் வரும் போது நிகழ்கிறது. இவைகளின் சொர்க்கத்தில் (வானத்தில்) ஏற்படும் சந்திப்பு நிகழாமல், திருமணம் நிகழ்வதில்லை. அவற்றின் சொர்க்கச் சந்திப்பு, திருமணத்திற்குத் தூண்டுதலாகிறது.
       இந்த நிகழ்விற்கான அடிப்படைக் காரணிகள், தொடர்புடைய தசாவுடன் கூடிய அனுகூலமான திசையும் ஆகும். கீழ்கண்ட நிலைகளில் பெண் பார்க்கும் படலம் நிகழ்த்தப்படலாம். ; -
1.      பையனும், பெண்ணும் முதல்முதலாக சந்திக்கும் போது.
2.      நிச்சியதார்த்த காலம்.
3.      திருமண காலம்.
4.      அனுகூலமான தசா / புத்தி நடைபெறும் காலம்.

பிரசன்ன ஜாதகம் - 1

சந், புத
குரு


கேது
சூரி, செவ்
    கோசார நிலை.
     6 மார்ச் 2011.
     இரவு 8 – 20.
        டில்லி.
        இராசி

சுக்

ராகு


லக்///, சனி

       
இந்த நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பெண் பார்க்கும் படலத்துக்குப் பையன் பெண்ணை ஏன் பார்க்க வரவில்லை ? - எனப் பார்க்கப்பட்ட போது, ஜன்ம லக்னம் கன்னியாகி, ஆணின் ஜாதகத்தை கோசார குருவும் , சனியும் தனது பார்வைத் தொடர்பால் 7 ஆம் வீட்டை இயக்கியது. மேற் கண்ட நாளன்று இரவு 8 – 20 க்குரிய ஜாதகக் கட்டத்தில் இலக்னாதிபதி புதன் மற்றும் குரு இருவரும் 7 ஆம் வீடான மீன வீட்டில் உள்ளனர்.  மேஷ இலக்னப் பெண்ணுக்கு, இலக்னாதிபதி செவ்வாய், 7 ஆம் அதிபதி சுக்கிரனும். கோசாரத்தில் 2/12 நிலையில் இருப்பதின் காரணமாக சந்திப்புக்கான காரணிகள் ஒத்துவராததால், பெண் பார்க்கப் பையன் வரவில்லை. கன்னி இலக்ன ஜாதகன் அதற்கு 3 தினங்களுக்கு முன்னரே அவன் தான் விரும்பிய வேறொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டான்.

பிரஸன்ன ஜாதகம் - 2

கேது




    கோசார நிலை.
1-      செப்டம்பர் 2014.
      4 – 48 - மாலை.
        டில்லி.
        இராசி
குரு
லக்///
சூரி, சுக்

சந், குளி
செவ், சனி
ராகு, புத


இன்னுமொரு ஜாதகர் 1 செப்டம்பர் 2014 அன்று மாலை 4 – 48 க்குப் பிரசன்னம் கேட்ட போது, ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் மகர இலக்னம் உள்ளது. இங்கே, ஜனன ஜாதக இலக்னாதிபதியும்,  7 ஆம் அதிபதியும், அவர்கள் பிரசன்ன ஜாதகத்தில் சந்தித்து விலகிச் சென்றுவிட்டனர், இது பெண்பாரக்கும் படலத்திலேயே பெண்ணுக்கும், பையனுக்கும் இடையேயான பிரிவினையைக் குறிகாட்டுகிறது.  7 ஆம் அதிபதி சந்திரன் அப்போதுதான் தனது நீச இராசியான விருச்சிகத்துக்கு, துலாத்தில் இருந்து மாறியுள்ளார். செப்டம்பர் 5 ஆம் நாள் செவ்வாயும் விருச்சிகத்தில் நுழைந்த அன்று, இவர்களிடையே உறவு முறிவு ஏற்பட்டது.  
       ஆகஸ்டு 30, 2014 இல் திருமணப் பேச்சு நல்லமுறையில் ஆரம்பித்த போதும், கேள்வி எழுப்பிய நேரத்தின் கோசார கிரக நிலைகள், இருவருக்கும் இடையே ஏற்பட்ட சூடான விவாதத்தினால் பிரச்சனை எழுந்ததை, பாதிக்கப்பட்ட நீச சந்திரனும், இடம் கொடுத்தவனும்,

  இணைந்துவிட்ட செவ்வாயும் தெளிவாகக் குறிகாட்டுகின்றன.

பிரஸன்ன ஜாதகம் – 3








கேது



சுக், செவ்
கோசார நிலை.
12    - பிப்ரவரி 2015.
5 – 33 - அதிகாலை.
டில்லி.
இராசி
குரு
லக்///, புத
சூரி


சனி, குளி
 சந்
ராகு

மேலே உள்ளது பிரசன்ன ஜாதகம். ஜனன ஜாதகத்தில் ரிஷப இலக்னாதிபதி சுக்கிரன், 7 ஆம் அதிபதி செவ்வாயும் சந்திப்புக்கு சாதகமாக இருந்தாலும், பிரசன்னக் கேள்வி நேரத்துக் கோசார கிரக நிலையில்,   7 ஆம் அதிபதி செவ்வாய், கும்ப லக்னத்திலுள்ள கோசார சுக்கிரனை விட்டு விலகி போகவுள்ளார். பிரசன்ன ஜாதகத்தில் மாறப் போகிற கிரகத்தின் தன்மை குறிப்பிடக்கூடியதாகும்.  கோசார இலக்னாதிபதி சனியும், 7 ஆம் அதிபதி சந்திரனும், 2/12 ஆக உள்ளது. இதன் காரணமாக, பார்க்க வந்த பையனுக்கும், பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு,  திருமணம் நடக்கவில்லை.
         ஜன்ன ஜாதக நிலைக்கும், கோசார கிரக நிலைகளையும் இணைத்துப் பார்க்கும் போது, திருமணம் நடந்து முடியுமா ? என்பதை விளக்கமாகக் கண்டது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment