Sunday, May 6, 2018

நாடியில் தனபாவம் செல்வ நிலை





நாடியில் தனபாவம்

செல்வ நிலை



1.           இலக்னாதிபதி பாக்கிய பாவத்தில் அமர்ந்து, புதன் கர்ம பாவத்திலும், கர்ம பாவாதிபதி தனபாவத்திலும் அமர ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தராகவும், பரந்த கல்வி நிலையையும் அடைவார். இந்த பலன்கள் அவருக்கு புதன் திசை, தனபாவாதிபதி திசை அல்லது இலக்னாதிபதி திசையில் ஏற்படும்.
         கர்ம பாவத்திலுள்ள கிரகத்தின் காரகத்துவங்கள் கனிந்து பழமாகி பலன் அளிக்கும். புதனின் கர்ம பாவ அமர்வு ஜாதகருக்கு அதீத கற்கும் திறனைத் தந்து மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆக்கி விடுகிறது. ( சனியின் கர்ம பாவ அமர்வு பூர்ண ஆயுளை அளித்தாலும், கஷ்டங்களையும் அதிகரிக்கிறது. ஆயினும், சனி அனுகூல நிலையில் இருந்தால் கவலைகளையும், கஷ்டங்களையும் சமாளித்துவிடக் கூடிய தன்மை நிலவும்).
        இலக்னாதிபதியின் பாக்கிய பாவ அமர்வு ஜாதகருக்கு அதிரஷ்டங்களை அள்ளித்தரும். பாக்கிய பாவம் பூர்வ புண்ணிய பலன்களைக் குறிகாட்டுகிறது.  கர்ம பாவாதிபதி, தனபாவத்தில் அமர்வது செல்வ நிலைக்கும், கல்வித் திறனுக்கும் சிறப்புச் சேர்க்கும் என்றாலும் ஜாதகரின் தந்தையின் ஆயுளில் கை வைக்கும் என்பதை நாம் அறிதல் வேண்டும். குருவைப் பொருத்தவரை இந்த நிலை, அதாவது குரு 10 ஆம் அதிபதியாக, 2 இல் அமர்ந்தால் கொல்லார். அவர் தந்தையின் ஆயுளை அதிகரிப்பார்.
2.          பஞ்சமாதிபதி சக்தி மிக்கவராக இருந்தாலோ அல்லது குருவுக்கு 2 இல் இருந்தாலோ செல்வ நிலையும், உயர் கல்வி நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனனால் இந்த நிலைகளில் அசுபத் தொடர்பு ஏற்பட்டால் செல்வ நிலையும், கல்வி நிலையும் சுமாரானதாகவே இருக்கும்.
        இவ் இணைவு ஜாதகருக்கு மிகச் சிறந்த செல்வ நிலையைத் தருவதோடல்லாமல் மழலைச் செல்வங்களையும் அளிக்கிறது. இலக்னத்திற்குப் 12 இல் குரு இருந்தால், ஜாதகரின் பொருளாதார நிலையை உயர்த்துவதோடு அல்லாமல், அவருக்கு அளவற்ற செல்வத்தையும் அளிக்கவல்லது. 5 ஆம் அதிபதிக்கு 12 இல் குரு இருக்க ஜாதகரின் குழந்தைகளுக்கு அளவற்ற செல்வ நிலையைத் தருகிறது. சந்திரனுக்கோ அல்லது 4 ஆம் அதிபதிக்குப் 12 ஆம் இடத்திலோ குரு இருக்க ஜாதகருக்கு தாய் மூலமாக அளவற்ற செல்வ நிலை ஏற்படுகிறது. சுக்கிரனுக்கு விரய பாவத்திலோ அல்லது களத்திர பாவாதிபதிக்கு விரய பாவத்திலோ குரு இருக்க ஜாதகருக்கு திருமணத்திற்குப் பிறகு அளவற்ற செல்வமோ அல்லது அதிர்ஷ்டமோ வந்து சேரும். சூரியனுக்கோ, பக்கியாதிபதிக்கோ 12 இல் குரு இடம் பெற தந்தையின் மூலமாக அளவற்ற செல்வம் கிடைக்கும். இதுவே ஒவ்வொரு பாவத்துக்கும் 12 இல் குரு அமரும் போது அந்த பாவ தொடர்புடைய உறவுகளின் மூலமாக குரு செல்வ நிலையை உயர்த்துவார். உதாரணமாக 7 க்கு 12 ஆம் பாவமான 6 இல் குரு இருக்க திருமணத்திற்குப் பிறகு செல்வ நிலை அதிகரிக்கும். அதுவே பலம் குறைந்த குருவானால் அந்த உறவு மூலமாக பொருளாதார இழப்புகள் ஏற்படும் அல்லது அந்த உறவுகளுக்கு பொருளாதார சரிவுகள் ஏற்படும் எனலாம்.
3.        சந்திரன் 7 இல் புதனுடன் இணைந்து, குருவும் சுக்கிரனும் 8 இல் இருக்க ஜாதகர் அசையா சொந்துக்கள், உயர்தர நவீன வாகனங்ளுடன் அரச வாழ்வு வாழ்வார்.
         சந்திரன், புதன் மட்டுமே 7 இல் இணைந்திருக்க அசையாச் சொத்துக்களும், அருமையான வாகனங்களும் அமையும். இதற்கு மேருகூட்டும் வகையில் குருவும், சுக்கிரனும் இலக்னத்துக்கு 8 இல் இருக்க மேலும் மேன்மையான நிலை அமையும்.
4.        கர்மாதிபதி மிதுனத்தையோ அல்லது கன்னியையோ அலங்கரித்தால்  ஜாதகருக்கு அநேக சொத்துக்கள் அமைவதோடு, தொழில் வெற்றிகளும் கிடைக்கும்.
         தனுசு இலக்னத்துக்கு கர்மாதிபதி புதன் கன்னியில், கன்னி இலக்னத்துக்குக் கர்மாதிபதி புதன் மிதுனத்தில் இருப்பது தொழில் நிலைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். எந்த இலக்னமானாலும் 10 ஆம் அதிபதி மிதுனம், கன்னியில் இடம் பெற ஜாதகரின் தொழில் நிலை வெற்றிகரமானதாக அமையும் என நூல்கள் அறிவிக்கின்றன. சுக்கிரன் கர்மாதிபதியாகி மிதுன, கன்னி இராசியில் இருக்க தொழில் வெற்றி உறுதியாகிறது. ஆனால், கர்மாதிபதி சுக்கிரன் கன்னியில் இருப்பது தொழில் வெற்றியில் நிச்சியமற்ற தன்மையோ அல்லது வெற்றி நிரந்தரமற்றதாகவோ அமைந்துவிடுகிறது. அது பல தடைகளையும் ஏற்படுத்தும்.
         கீழ்கண்ட 16 மே, 1959 அன்று 11 நா. 29 விநா யில் அட்சாம்சம் 26 வ 29  ரேகாம்சம் 80 கி 21 இல் பிறந்த பெண் ஜாதகம் மேற் சொன்ன விதிக்கு உதாரணமாகும்.
கேது
புத
சூரி
செவ்
சுக்



இராசி
லக்//

சந்
சனி
குரு

இராகு

கேது தசா இருப்பு – 4 வ – 1 மா – 10 நாள்.
          இந்த ஜாதகி செல்வ வளம் மிக்கவர். அமெரிக்காவில் சுயதொழிலில் ஈடுபட்டு நல்ல நிலையில் உள்ளார். இவரது பொருளாதார முன்னேற்றம், உயர்வு சுக்கிர திசை, புதன் புத்தி காலத்தில் ஏற்பட்டது. 10 ஆம் அதிபதி செவ்வாய் மிதுனத்தில், அவருக்கு இடம் கொடுத்த புதன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். மேலும், குரு இலக்னத்தையும், சூரியனையும் பார்வை செய்கிறார். சந்திரனும், குருவும் பரஸ்பர கேந்திரங்களில் உள்ளனர். சனியும் 6 இல் உள்ளார்.
5.        கர்ம அல்லது இலாபாதிபதிகளில் ஒருவர் இலாப பாவத்தில் அமர்ந்து, இலக்னாதிபதியை பார்வை செய்தால் ஜாதகர் நிறைந்த செல்வத்தையும், மிகுந்த ஆதாயங்களையும், அசையா சொத்துக்களையும் அனுபவித்து மகிழ்வார்.
6.           10 அம் அதிபதி, 4 ஆம் அதிபதி, 11 ஆம் அதிபதி ஆகிய மூவரில் ஒரு கிரகம் 11 இல் இருந்து இலக்னாதிபதியைப் பார்க்க வேண்டும். சிறப்புப் பார்வையுடைய கிரங்களைத் தவிர மற்ற கிரகங்கள் 5 இல் இருந்தால் மட்டுமே இலக்னாதிபதி 11 ஆம் இடத்தைப் பார்க்க இயலும். இவ்வாறாக மேற்சொன்ன 3 அதிபதிகளில் ஒருவரை இலக்னாதிபதி பார்க்க மேற்சொன்ன பலன்கள் சாத்தியமாகும். 5 இல் உள்ள இலக்னாதிபதி அசுப கிரகமானலும் புத்திர பாக்கியத்திற்குப் பிரச்சனை இருக்காது, ஏனெனில் 11 ஆம் இடத்தில் இருக்கும் கிரகம் பரஸ்பர பார்வை புரிவதே ஆகும்.
7.         சுக்கிரனும், புதனும் 4 இல் இருக்க, தனபாவத்தில் குரு இருப்பின் ஜாதகர் அதிகப்படியான செல்வத்துடன் அளவற்ற மகிழ்ச்சியுடன் வாழ்வார். செவ்வாயும், சந்திரனும் 7 இல் இணைந்து இருந்தாலும் இதே பலனே ஏற்படும்.  
         சுக்கிரனும், புதனும் சுகபாவத்தில் இல்லாது குரு 2 இல் இருந்தால் பொருளாதார சந்தோஷம் ஜாதகருக்கு இருக்காது. 4 இல் மேற்சொன்ன கிரகங்கள் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சிறப்பான பொருளாதார உயர்வு மகிழ்ச்சி தரும். ரிஷப இலக்ன ஜாதகருக்கு 7 ஆம் இடமான விருச்சிகத்தில் உள்ள ஆட்சி பெற்ற செவ்வாயும், நீசம் பெற்ற சந்திரனும் இந்த யோகத்தைக் கெடுத்து விடுவதில்லை. (செவ்வாய் ஆட்சி வீட்டில்)    
8.        கடக இலக்ன ஜாதகருக்கு உச்ச சுக்கிரனை சந்திரன் பார்க்க அவர் உலகம் முழுமையிலும் முக்கியத்துவம் பெற்று உச்ச நிலையில் இருப்பார்.
          இந்த அமைப்பில் சுக்கிரன், கன்னி நவாம்சம் பெற ஜாதகர் நிலை சிறிது குறையும். ஆனால், சந்திரனின் சுக்கிரன் மீதான பார்வை பொதுவாக அதிகாரமுள்ள உயர் நிலையைத்தரும்.
9.        இலக்னாதிபதிக்கு இடம் கொடுத்தவன் இலக்னத்துக்கு கர்ம பாவத்தில் நின்று அவருக்கு இடம் கொடுத்தவனால் பார்க்கப்பட, ஜாதகர் வாழ்க்கை முழுவதும் நிறைந்த செல்வம் உடையவராகத் திகழ்வார்.   
10.        குரு இலக்னத்தில் இருக்க, இலக்னாதிபதி தனபாவத்திலோ அல்லது விரய பாவத்திலோ இருக்க ஜாதகர் வாழ்க்கை முழுவதும் நிறைந்த செல்வம் உடையவராகத் திகழ்வார். ஆனால், இவ்விரு கிரகங்களும் தங்களது நீச இராசியில் இருக்கக் கூடாது.
          இலக்னாதிபதி விரய பாவம் ஏறுவது ஜாதகத்திற்கு பலத்தை அளிக்காது  என்றாலும், இலக்னத்திலுள்ள குரு ஜாதகத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தி வாழ்க்கை முழுவதும் நிறைந்த செல்வத்தைக் கொடுத்துவிடுகிறது.  ஆனால் இந்த நிலை மகர இலக்னத்திற்கு முழுவதுமாக சரிப்பட்டுவராது. சனியின் மூலதிரிகோண இராசியான கும்பத்தில் சனி 2 ஆம் இடத்தில் இருப்பது, 12 ஆம் இடமாக குருவுடன் பரிவர்த்தனை பெற்று கும்பத்தில் அமைவதைவிட சிறப்பானது.

No comments:

Post a Comment