Showing posts with label உங்கள் நட்சத்திர பலன்கள். 21 – 12 – 2014 முதல் 27 -12 – 2014 வரை--தினபூமியில். Show all posts
Showing posts with label உங்கள் நட்சத்திர பலன்கள். 21 – 12 – 2014 முதல் 27 -12 – 2014 வரை--தினபூமியில். Show all posts

Sunday, December 21, 2014

உங்கள் நட்சத்திர பலன்கள். 21 – 12 – 2014 முதல் 27 -12 – 2014 வரை-தினபூமியில்

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
உங்கள் நட்சத்திர பலன்கள்.
21 – 12 – 2014 முதல் 27 -12 – 2014 வரை


மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
       இந்த வாரம் குருமார்களின் உபதேசம் கிடைத்து, பக்தி மார்க்கத்தில் மனம் ஈடுபடும். சிலருக்குக் குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்பட்டும். பிறரிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத தனவரவு ஏற்படும். வீட்டில் பெரியோர்களின் ஆசியோடு சுபகாரியங்கள் விமரிசையாக நடக்கும். சகோதரரிடம் அன்பாய் இருங்கள்.. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் மேன்மை அடையலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தரலாம். வாலிப நெஞ்சங்கள் விருந்து, சினிமா என மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பர். வாக்குவன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்பிரயாணத்தின் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
பரணி  --
       இந்த வாரம் உங்களுக்கு திடீர் பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு சுறுசுறுபற்ற நிலை காரணமாகக் காரியத் தடைகள் ஏற்படலாம். வீண் அலைச்சல்களால் செலவும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்எதிரிகளின் பணமும் வந்து சேரும்.   வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கையால் ஆனந்தம் பெருகும். புதிய தொழில் விரிவாக்க முயற்சிகளால், பொருளாதார நிலை உயரும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
       இந்த வாரம் வாக்கு வன்மையால் மேடைப் பேச்சாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். போட்டி, பந்தயங்களில் வெற்றி அடைவர். புத்தகப் பதிப்பாளர்களுக்குத் தொழிலில் ஏற்றம் ஏற்படும். பெண்கள் அதிகாலையில் எழுந்து பூஜா காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைந்து, நிம்மதியும் பெறுவர். தாயின் அன்பும், அரவணைப்பும் கவலைகளை மறக்கச் செய்யும். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவு உட்கொள்ளவும் நேரம் இருக்காது. அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். எவ்விதக் குறைகளும் இருக்காது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகை வரிப் பாக்கிகள் செலுத்துவதற்குத் தேவையான  பணவுதவிகள் கிடைக்கும்பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
       இந்த வாரம் இனிய வாரம். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் இல்லத்திற்கு விஜயம் செய்யும் விருந்தினரோடு பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி ஆடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்குப் போதுமான தனவரவு இருக்கும். பெண்களால் இலாபம் ஏற்படும். தாயார் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளுவார். தொலைதூரச் செய்திகள் நன்மை அளிப்பதாகவும்மனமகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கும். பொதுவாகப் பயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு எந்த ஒரு காரியச் செயல்பாடும்  சுறுசுறுப்பற்ற மந்த கதியிலேயே நடக்கும். கடன், செலவு என பணம் பற்றிய சிந்தனைகளே அதிகம் இருக்கும்.
ரோகிணி  –
       இந்த வாரத் துவக்கத்தில் வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. கீழே விழுதல், காயம்படல் போன்ற சிறு விபத்துக்கள் ஏற்படலாம். மற்றபடி, வாழ்க்கையில் முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தை வழி உறவுகளால் வீண்தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பரிப்பீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
       இந்த வாரம் விரைவு (பாஸ்ட் ஃபுட்) உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களோடு வெளிவட்டாரங்களில் ஜாலியாகச் சுற்றுவதால் படிப்பு பாதிப்பு அடைவதோடு, செலவையும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். சிலருக்கு வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சி பொங்கும் தருணங்களால் பந்துக்களின் உறவு பலப்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடாது, இருக்கும் நிலையையே தொடர்ந்தால் ஏற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்குப் போதிய பொருள்களின் வரவால், பணவரத்தும் அதிகரிக்கும். பக்தி சொற்பொழிவுகளைக் கேட்பதால் ஞானம் பெருகும். இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.    தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –
       இந்த வாரம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம். நற்பலன்களை எதிர்பார்க்கலாம்  முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கலாம். தொழிலில் புதிய நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். சினத்தைக் குறைத்தால் வீட்டில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். தீயவர்களைக் கண்டவுடன் விலகுவது நல்லது.  தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
திருவாதிரை ---
       இந்த வாரம் உங்களுக்குப் புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம்கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லைஆகியவை ஏற்படும். எனவே  துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்குத் திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
       இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். உங்களுக்கு பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகளால் உதவி இருக்காது. விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் துய்ப்பீர்கள். சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் ஏற்படும்மேலதிகாரிகளால் அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும்சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
       இந்த வாரம் உங்கள் உடலில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.
பூசம் -- 
       இந்த வாரம் நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் தன்னிகரற்ற பணியின் காரணமாகப் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை. வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும்
ஆயில்யம்
       இந்த வாரம் நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்சுபகாரியச் செலவுகள் ஏற்படும்புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
. சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
       இந்த வாரம் சுப காரியங்களுக்காக வீடே விழாக் கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படுவதோடு தீரச்செயல்களுக்கான விருதும் கிடைக்கலாம். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் புதிய இடத்திற்குப் பணிமாற்றங்கள் ஏற்படலாம்மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.

பூரம்
       இந்த வாரம் உங்களுக்குப் பயணத்தின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் சகாயங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும்.
உத்திரம்- 1 பாதம்
      இந்த வாரம் தனவரவு தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். பேச்சாளர்களுக்கும், புத்தக வெளியீட்டாளர்களுக்கும் தொழிலில் வெற்றியும், பாராட்டுக்களும் கிடைக்கும். அரசு உதவியுடன் விரிவாக்கத் திட்டங்கள் தீட்டுபவர்களின் திட்டங்கள் தங்கு தடையின்றி நிறைவேறி முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலமாக பணமும், புகழும் கிடைக்கும். தொய்வின்றி தங்களை பணிகளைக் கடமையுணர்வுடன் நிறைவேற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு நிச்சியம் இருக்கும். குடும்பத்தாரிடையே வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
       இந்த வாரம் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவர்வர்.
ஹஸ்தம்
       இந்த வாரம் உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
       இந்த வாரம் பொது இடங்களில் தீயவர்களைக் கண்டு விலகிச் செல்வது சிக்கல்களில் இருந்து விடுபட உதவும். குழந்தைகளிடம் அன்பாகப் பழகவும். சிலருக்குக் குழந்தைகள் மூலமாகத் தொல்லைகள் ஏற்படலாம்.  மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.

துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
       இந்த வாரம் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். உயர்அதிகாரிகளிடம் சுமுகமாக நடந்துகொள்வது முன்னேற்றத்தைத் தரும். நல்லெண்ணங்களை வளர்த்துக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் போது நெருங்கிய உறவுகளின் ஒத்துழைப்பால் நிகழ்ச்சி சிறப்பாக அமையும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதிய வியாபாரத் தொடர்புகளால் வருமானம் பெருகி, வாழ்க்கையும் வளமாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
சுவாதி
      இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
       இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த அளவுக்கு மேல் உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
        இந்த வாரம் நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான்  அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும்.   வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும்.
அனுஷம்
       இந்த வாரம் வித்தைகளில் தேர்ச்சியும் அறிவுத்திறனும் கூடும். உழைப்பு அதிகமாகி களைப்பும், சோர்வும் ஏற்படும். சகோதர முன்னேற்றம், காரிய சித்தி, தலைமைப் பதவி ஆகியவை ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குச் சாதகமான நிலை உருவாகி பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். கல்வியில் குழந்தைகளின் தேர்ச்சி பெற்றோர்களைப் பெருமை கொள்ளச் செய்யும். அரசியலில் சிலருக்கு மாவட்டப் பொறுப்புக்கள் தேடிவரும். உயர்அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் எளிதில் பணி உயர்வு கிடைக்கும். பெரும் புள்ளிகளின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும்.


கேட்டை
     இந்த வாரம் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களால் கடன் வாங்கும் நிலையைத் தவிர்க்கலாம். மாணவர்கள் வேண்டாத வேலைகளில் ஈடுபடாமல், தங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.   வேலையில் சிரத்தையும், கடின உழைப்பும் உங்களுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
       இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.
பூராடம்
       இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். கூட்டாளிகளின் நியாயமற்ற செயல்பாடுகள் எரிச்சலைத் தரும். தொழிலில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக இழைக்க வேண்டியது வரும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். கல்வியைப் பொருத்தவரை பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
       இந்த வாரம் உங்களுக்கு அனைத்து சுக சௌகரியங்களும் அதிகரிக்கும். சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்

மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
       இந்த வாரம் பல வழிகளில் வருமானம்  கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.
 திருவோணம்-
       இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
       இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
       இந்த வாரம் உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு      களிப்படைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள்  நடந்து முடியும். அதிகப்படியான வருமானங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி புதிய வேகம் பிறக்கும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.
சதயம்-
       இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். நல்லுறவுகளின் அனுசரணையாலும், அன்பாலும் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் சீராகும்.  இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற மிகுந்த அக்கறையுடன்  படித்தல் அவசியம்வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
      இந்த வாரம் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, பணி உயர்வு மற்றும் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.. உடல் உபாதைகள் காரணமாகத் தொழிலில் உற்பத்தி பாதிப்புக்கள் ஏற்படலாம். ஆயினும்எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் முழுமையான ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். மனங்கவர்ந்த அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். கடையில், நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி, வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
       இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமைமிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர்.
உத்திரட்டாதி-
       இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள்.  சிலருக்குத் தங்கள் மனதிற்குப் பிடித்தபடி அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்குப் புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்தும் உயரும்விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். மாணவர்களுக்குத் தங்கள் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பால்வளம் பெருகுவதால் ஆதயமும் பெருகும். மனதில் நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.


ரேவதி-
       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். விஐபி களுடன் ஏற்படும் நட்பின் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலை உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். மற்றவர்களுக்கு நல்லது செய்வதின் காரணமாக உங்கள் கீர்த்தி பெருகும். மனைவி, மற்றும் உறவுகளிடம் சுமுகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும்.

n