Showing posts with label ஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். ஜாதகம் - 18 & 19. Show all posts
Showing posts with label ஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். ஜாதகம் - 18 & 19. Show all posts

Thursday, May 24, 2018

ஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். ஜாதகம் - 18 & 19



ஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். 


ஜாதகம் - 18 & 19




ஜாதகம்-18
சுக்,சூரி
புத


சனி,செவ்
இராகு


உ. ஜா. 18




குரு
கேது
சந்




         இந்த ஜாதகத்தில் (18) சிம்மம் குருவுக்கு நன்மை தரும் இராசியாகும். அதற்கு 2, 12 மற்றும் 7 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை. எனவே, ஜாதகர் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வெகுதூரம் சென்று யாருடைய உதவியும் கிடைக்காமல் வாழ்வார். சில நேரங்களில் வாழ்க்கை அபாயகரமானதாக இருக்கும். ஆயினும், சூரியன், குரு பரிவர்த்தனையால் ஒவ்வொரு கிரகமும் பிற கிரகங்களின் இராசிகளில் இடம் பெறுவதால் அவருக்கு ஏற்பட்ட இந்த அசுப பலன்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றங்களும், வெளி நாட்டில் குடியிருக்க வீடும் பெற்று மகிழ்ந்தார்.
அஸ்தமன கிரகங்களின் விளைவுகள்
         இந்துக்கள் முகூர்த்தம் வைப்பதற்கு முன் ஜோதிடரை அணுகி நல்ல நாள் பார்க்கச் சொல்கிறார்கள். சுக்கிரன் பெண்ணுக்கு ஜீவன் காரகன், ஆணுக்கு மனைவி காரகன் ஆவார். அவர் சூரியனுக்கு மிக அருகே வரும் போது ஜோதிடர்கள் திருமண நாளை ஒத்திப் போட்டு சுக்கிரனின் அஸ்தமனம் நீங்கி சூரியனை விட்டு சுக்கிரன் விலகிய பின்பே நாள் குறித்துத் தருவார். எனவே, சுக்கிரனின் நிலை, பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் நடக்கும் வரை   திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியமானதாகிறது. ஜோதிடத்தில் சுக்கிரனும், சூரியனும் மிக அருகே நெருங்கி வரும்போது மற்றும் இரண்டும் ஒரு நட்சத்திரத்தின் ஒரே பாதத்தில் இருக்கும் போதும் சுக்கிரன் அஸ்தமனம் ஆவதாகக் குறிப்பிடப்படுகிறது. சுக்கிரன் அஸ்தமனம் ஆகும் போது ஆண் பெண் இருவருக்குமான இனப் பெருக்க சக்தி குறைகிறது. சூரியன், சுக்கிரன் இருவரும் ஒரே நட்சத்திர பாதத்தில் இருக்கும் போது ஜாதகருக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது. ஆகையால், ஒரு கிரகம் அஸ்தமனமாகி உள்ளதா ? இல்லையா என்பதை அறிதல் அவசியமாகிறது.
        சுக்கிரன் அஸ்தமனம் ஆனாலும் புதன், குரு ஆகிய கிரகங்களுடன் பரிவர்த்தனை பெறும் போது, சுக்கிரனுக்கு அஸ்தமன நிலையால் ஏற்படும் பலம் இழப்பு நீங்கி முழு பலத்தைப் பெற்றுவிடுகிறது.
        சூரியன் இராகுவோடு இணைந்து கிரகணமாகி, சுக்கிரனும் நெருங்கி அஸ்தமனம் ஆனால் சூரியனின் பலம் மட்டுமே குறையுமே அன்றி சுக்கிரனின் பலம் குறையாது. ஆகையால், பிற கிரகங்களின் சூரியனுடனான அஸ்தமன நிலை, அவை பரிவர்த்தனை பெற்றால் அந்த நிலைகளை தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
        சூரியன், இராகு மற்றும் சுக்கிரனுடன் இணையும் போது, சுக்கிரன் அஸ்தமனம் ஆக அந்த ஜாதகர் ஆண்மகவினை இழந்து துன்பங்களை அனுபவிப்பார். ஆண் குழந்தை பெறும் முயற்சி தடைப்படும். ஆனால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
         நாடி ஜோதிடத்தில் ஜாதகரின் ஜாதகத்தில் 12 இராசிகளில் உள்ள கிரக நிலைகளை மட்டுமே ஆராய்ந்து பலன் உரைக்க எடுத்துக் கொள்ளப்படுகிறது. அஷ்டவர்க்கம், வர்க்கக் கட்டங்கள், பிந்து சோதனை, தசா புத்தி பலன்கள் இன்ன பிற நிலைகள் பலன் உரைக்க எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நாடியில் பலன் அறியும் முன் ஒருதிசை கிரகங்களின் நிலைகள் ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஜாதகம் – 19
சூரி


புத
சுக்



உ. ஜா. 19
கேது
லக்//,
இராகு



சனி,
சந்
குரு
செவ்



          உதாரணமாக – இந்த ஜாதகர் (19) புகழ் பெற்ற ஆலய ஸ்தலத்தில்,நீர் நிலைக்கு அருகில் உள்ள பெரிய கோவில் அருகே பிறந்திருப்பார். இதை பாரம்பரிய முறையில் கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆனால், நாடி ஜோதிடத்தில் ஜீவன் காரகன் குரு ஆத்ம காரகன் சூரியன், விடுதலை, மோட்ச காரகன் கேது ஆகியோர் வட திசையைக் குறிக்கும் விருச்சிகம், மீனம் மற்றும் கடகம் ஆகிய இராசிகளில் உள்ளன. இதனால் குரு, சூரியன், கேது ஆகியோர் தொடர்பில் உள்ளனர். இந்த மூன்று கிரகங்களின் நிலைகளைக் கொண்டு இவர் புண்ணிய ஸ்தலத்தில், நீர்நிலை அருகே பிறந்ததை உறுதி செய்கிறோம். கடகம் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பார்க்கடலைக் குறிக்கிறது. இது அவர் பிறந்த ஊரின் புனிதத்தையும், மிகப் பெரிய கோவிலின் அருகாமையையும் குறிகாட்டுகிறது.