Showing posts with label ஜோதிடருக்கான இணைவுகள்.. Show all posts
Showing posts with label ஜோதிடருக்கான இணைவுகள்.. Show all posts

Wednesday, October 8, 2014

ஜோதிடருக்கான இணைவுகள்.


ஜோதிடருக்கான இணைவுகள்.


        பல பாரம்பரிய ஜோதிட நூல்களில், ஜோதிடர்களுக்கான இணைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பகுதியில் காண்போமா .?

       பிருகத்   பராசர    ஹோரா  சாஸ்திரா “ -- எனும் நூலில் -- ஜோதிடம்,  கல்வி,   கணிதம்,  நடனம், விஞ்ஞானம், நகைச்சுவை, மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றுக்குக் காரகன் புதன் என்று குறிப்பிடப்பட்டு ள்ளது.

1.       ஜோதிடத்திற்கும் ,  8  ஆம்     டத்திற்கும்   கண்டிப்பாக   சம்பந்தம்   இருப்பதாக மகரிஷி    பராசரர்     குறிப்பிடுகிறார்.     ஏனெனில்,   ம்   வாழ்க்கையில்,  கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் 8 ஆம் இடமே குறிப்பதாக பராசரர் கருதுகிறார்.

2.       பல்வேறு   ராசிகளில்   லக்னம்   அமையும்போது   ஏற்படும்  பலன்களைப்பற்றி குறிப்பிடுகையில், பராசரர், லக்னாதிபதி 8 ல் இருந்தால், ஒருவரை மறைபொருள் பற்றிய விஞ்ஞான நிபுணராக ஆக்கிவிடுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

3.       மேலும் ஐந்தாமிடம்  யந்த்ர,   மந்த்ரம்    முதலியவற்றைக்    கற்றுக்   கொள்ளுதல் மற்றும் உருவாக்கும் இடம் என்கிறார். ஐந்தாமிடம், தொழில்  ஸ்தானமான பத்தாமிடத்துக்கு, 8 ஆம் டமாதலால் , மறைபொருளுடன்  தொடர்பு இருக்கலாம், அது ஏனெனில் லக்னத்துக்கும் 8 ஆம் டத்திற்கும் தொடர்பு இருப்பதே காரணம் எனக் கருதுகிறார்.

4.       சத்யாச்சார்யா  தனது   சத்ய  ஜாதக” -- எனும் நூலில் -- ஜோதிடம், சிற்பக் கலை, கவிதைகள் போன்றவற்றிற்கு புதனே காரகன் என்கிறார்.

5.       வராகிமிகிரர் தனது பிருகத் ஜாதகம்” -- எனும் நூலில் --  இரு இணைவுகளைக் குறிப்பிடுகிறார்.

() சூரியன் மிதுனத்தில் இருக்க, ஒருவர் கற்றறிந்த ஜோதிடராகவும், செல்வந்தராகவும்  ஆகிறார்.
() சிம்மத்தில்  சந்திரனிருந்து புதனால் பார்க்கப்பட ஒருவர் மிகச் சிறந்த ஜோதிர் ஆகிறார்.

6.       பித்துயசாஸ் -- தனது  ஹோரா  சாஸ்த்ரா” - எனும் நூலில் -- கடகத்தில்  சந்திரன் இடம்பெற ஒருவர்  ஜோதிடர் ஆகிறார்  என்றும், வேறு சில ரிஷிகள், கடக சந்திரன் மற்றும் மிதுன சூரியனும்  ஒருவர்  ஜோதிடராகக்  காரணமாகிறது -- எனக் குறிப்பிடுகின்றனர்.

7.       கல்யாணவர்மா,   தனது    சாராவளி” -- எனும் நூலில் -- மிதுனச் சூரியன் மற்றும் கடக சந்திரனும்   ஒருவரை    ஜோதிடர் ஆக்குவதாகக்   குறிப்பிடுகிறார். கன்னியில் சந்திரன் இருந்து புதனால் பார்க்கப்பட திறமைமிக்க ஜோதிடர் ஆகிறார். அதே போல் தனுசுவில் சந்திரன் இருந்து, புதனால் பார்க்கப்பட  ஜோதிடக் கலை, மற்றும் சிற்பக்கலையில் நிபுணர் ஆக்கிவிடுகிறது. 
    
         (   ஜோதிஷ, ஷில்பக் க்ரியாதி நிபுணக  ).

8.       மேலும், கல்யாணவர்மர்” - கூறுவதாவது-  சந்திரன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூவரின்,  பலம் மிக்க கூட்டு, மிகப் பிரசித்தி பெற்ற ஜோதிடர் ஆக்குகிறது என ஸ்லோகம் 25 அத்தியாயம் 16 ல் குறிப்பிடுகிறார்.

9.       மற்றுமொரு இணைவாக அவர் கூறுவது - சந்திரனிலிருந்து 10 ஆம் இடத்தில், சூரியன், செவ்வாய் இணைவைக் குறிப்பிடுகிறார். மேலும், சந்திரனில் இருந்து 10 ல் அசுபர் இருந்து சுபரால்  பார்க்கப்பட  ஒருவர்  மருத்துவராகவோ, மதபோதகராகவோ, ஜோதிடராகவோ  ஆகலாம் என்று குறிப்பிடுகிறார்.   அதேபோல், செவ்வாய், குரு இணைவு ஒருவரை வேத அங்கங்களில் நிபுணர் ஆக்கிவிடும் -- ன்றும் செவ்வாய், சுக்கிரன் இணைவு  ஜாதகரை கணிதம் மற்றும் ஜோதிடத்தில் நிபுணர் ஆக்கிவிடுகிறது என மேலும் குறிப்பிடுகிறார்.

10.    சிம்ம நவாம்சத்தில்  சந்திரன் இருக்க, புதன் பார்க்க, செவ்வாய், மிதுன நவாம்சம் அல்லது கன்னி நவாம்சத்தில் இருக்க, புதனால் பார்க்கப்பட அல்லது குரு மிதுனம் அல்லது கன்னியில் இருந்து புதனால் பார்க்கப்பட, திறமையான ஜோதிடர் ஆகிறார்.

11.    ஜாதக சந்திரிகா” - எனும் நூலில் -- “ஜயதேவா, -- பல முனிவர்கள் குறிப்பிட்டது போல் மிதுன சூரியன்   அல்லது  கடக சந்திரன் உள்ள ஜாதகர் திறமைமிக்க ஜோதிடர் ஆவார் என்கிறார்.

12.    மனசாகரி  -- எனும் நூலில் --  (). செவ்வாய், சுக்கிரன் ().  2 ம்  அதிபதி  11 ல், () உச்ச சுக்கிரன் () மிதுனத்தில்  சூரியன்  ஆகிய  இணைவுகள்  ஒருவரை ஜோதிடர் ஆக்குகிறது.

13.    செவ்வாய், சுக்கிரன் இணைவு – திறமைமிக்க ஜோதிடர் என காசிநாத்”- குறிப்பிடுகிறார்.

14.    பலபத்ரா, தனது  ஹோரா  ரத்னா” - எனும் நூலில் --   () கடகத்தில் சந்திரன்  ()  கன்னியில் சந்திரன், புதனால்  பார்க்கப்படவும்  ()  தனுசுவில் இருக்கும்  சந்திரனை புதன் பார்க்கவும் ()  மிதுனத்தில் குரு இருக்க, புதன் பார்க்கவும் திறமைமிக்க ஜோதிடர் ஆகிறார்.

15.    மந்தரேஸ்வரர் தனது பலதீபிகை” - எனும் நூலில் --  சிம்ம சந்திரனை புதனை பார்க்கவும்.

16.    ராமானுஜாச்சார்யாதனது பாவார்த்த ரத்னாகரா” -- எனும் நூலில் --   கீழ்க்கண்ட ணைவுகளைக்  குறிப்பிடுகிறார்—  () 4 ல் புதன்.   ()   2 ல் சூரியன், புதன். () அவர்களே, கேந்திரம் அல்லது  கோணம்  அல்லது    11 ல் இருக்க கணிதத்தில் மற்றும் நிபுணத்துவம் உண்டாகிறது.  ()  சூரியன்  அல்லது புதன் மற்றும் ராகு 5 ல் இருக்க திறமை மிக்க ஜோதிடர் ஆவார்..

17.    வெங்கடேசா  தனது   சர்வார்த்த    சிந்தாமணி” -- எனும் நூலில் --  10 ம் அதிபதி புதனின் நவாம்சத்தில் இருக்க, வானியல் மற்றும் ஜோதிடம் மூலம் வருமானம் வரும் எனக் குறிப்பிடுகிறார்.

18.    காளிதாசர் --  தனது   உத்திரகாலமிர்தம் எனும் நூலில் --, குரு மற்றும் புதனையே ஜோதிடத்திற்கு  முதன்மையான  காரகர்களாக்  குறிப்பிடுகிறார். ஆயினும், சூரியனுக்கும் முக்கியத்துவம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஏனெனில், இந்திய ஜோதிடம், சூரிய  சித்தாந்தாத்தின்   அடிப்படையிலானது   மற்றும்   அவன் அறிவுக்கும் விஞ்ஞானத்துக்கும்  தந்தை, அவனே   ஆத்மாவும்,    என்பதேயாம்.  நமக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தக் கூடிய சூரியன், குரு மற்றும் கேது ஆகியோர் ஆவர். இவர்களுடன் சந்திரன் இணைய அதற்குத் தூண்டுதலாக   அமைந்து விடுகிறது.

19.    சுக்கிராச்சார்யா –   புதன் மற்றும் சுக்கிரனை ஜோதிடர்களுக்கான காரகர்களாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அவர் குருவை ற்றுக் கொள்ளவில்லை.

20.    பாஸ்கராச்சார்யா  தனது  பாவதீபிகா” -- எனும் நூலில்  --  லக்னத்தில்  குருவும், 2 ஆம் இடத்தில் உச்ச புதனும், 6 ஆம் இடத்தில் சனியும் இருக்க ஒருவர் கணிதத்திலும், வானியலிலும், ஜோதிடத்திலும் நிபுணராக இருப்பார்.

21.    கேரள   சாஸ்த்திரம்எனும் நூலில் --   லக்னத்தில்  புதன் இருக்க, ஒருவர் நுண்கலைகளிலும்,  கணிதத்திலும், வானியலிலும்  மற்றும்  ஜோதிடத்திலும்  நிபுணத்துவம் பெறுவார்.

22.    மகாதேவர்” – தனது, ஜாதக தத்துவா”  -- எனும் நூலில் --

() புதன் மற்றும் சுக்கிரன் இணைவு 2 அல்லது 3 ஆம் டத்தில் இருக்க மிகப்பெரிய  ஜோதிடர்.
() 2 ம் அதிபதி பலம் பெற்று கேந்திர, கோணம் அல்லது 11 ல் இருக்க.
() உச்ச குரு 2 ம் இடத்தில் வக்கிரம் பெறாமல் இருக்கவும்.
() குரு கேந்திர, கோணத்திலிருந்து சுபர் பார்வை பெற, வருமுன் உரைப்பவராக இருப்பார்.

23.    முகுந்த தெய்வஞ்ஞர் தனது பாவ மஞ்சரி” -- எனும் நூலில் --   ஜோதிடக்  கலைக்குக் காரகராக புதன், குருவைக்  குறிப்பிடுகிறார்.  அவர்  சூரியனை  நட்சத்திரக் கல்விக்கும், ஆகாய   திருஷ்டிக்கும்,   ஞானோதயத்திற்கும்   காரகராகக்  குறிப்பிடுகிறார். கேதுவை, பிரம்ம  ஞானத்திற்கும், ஆத்ம   ஞானத்திற்கும் காரகராகக் குறிப்பிடுகிறார்.   புதனும், குருவும் ஜோதிடரை உருவாக்கினாலும், சூரியனும், கேதுவும் இணைந்து, தனித்திறமை மிக்க ஜோதிடரை உருவாக்குவதாகக் குறிப்பிடுகிறார்.

24.    தற்கால  ஜோதிட  மேதையான  ஜே. என். பசின், லக்னம் அல்லது லக்னாதிபதி, 4 மற்றும் 12 ம் அதிபதிகளுடனோ  அல்லது அந்த இடத்துடனோ சம்பந்தம் பெற ஜாதகர் ஒரு புகழ் பெற்ற ஜோதிடராவார்.

25.    ஹெச். என். கத்வே --   பலனுரைக்க 2 ஆம் இடத்தைப் பார்க்கச் சொல்கிறார். மேலும்,   5 ஆம் இடம் மற்றும் 5 ம் அதிபதி ஆகியோரை, நூல் வெளியிடவும், 3 ம் அதிபதி, 3 ம் வீடு   ஆகியவை  மொழி பெயர்த்து   எழுதுதல், பிரதி எடுத்தல், சரி பார்த்தல், எழுத்தாளர், பத்திரிக்கைத் துறை,  அஞ்சல் வழிக்கல்வி  ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்  -- என  உரைக்கிறார். மேலும், 4 ம் அதிபதி அல்லது    5 ம் அதிபதி லக்னத்திலும்,  4 ம் அதிபதி  5 ல் அல்லது  2 ல் இருக்கவும், 5 ம் அதிபதி 9 ல் அல்லது 9  ம்  அதிபதி லக்னத்திலோ அல்லது 5 ல் இடம் பெற ஜோதிட நிபுணர் க்கிவிடுகிறது.

26.    மேலும், அவர் திறமைமிக்க ஜோதிடர் ஆவதற்குக் காரணமாக, கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் லக்னமாகி, அதிலிருந்து 1, 2, 3, 8 மற்றும் 9 ஆம் இடங்களில் சூரியன், புதன்  இணைந்திருப்பதைச்  சுட்டிக் காட்டுகிறார். சூரியன், செவ்வாய் அல்லது செவ்வாய், சனி இணைவு 10       ஆம் டத்தில் ஏற்படவும் மற்றும் புதன், ராகு சேர்க்கை       5 ஆம் இடத்திலும்  மற்றும்  சூரியன், செவ்வாய், குரு அல்லது சந்திரன், குரு சுக்கிரன் அல்லது சந்திரன், சுக்கிரன், சனி  அல்லது சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய  இணைவுகள், பொதுவாக  5 ல்  ஏற்படத் திறமை மிக்க ஜோதிடர் உருவாக்கப்படுகிறார் என்றும் குறிப்பிடுகிறார்.

27.    இனி   ஜோதிட  மேதை   பீ. வி. இராமன் அவர்கள், என்ன சொல்கிறார் ? -- என்றும் வரிசையாகப் பார்ப்போம்.

ராசி முக்கியத்துவம் –   விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு மாயா ஜாலங்களில் ஆர்வம் இருக்கும்.  தனுசு   லக்ன ஜாதகருக்கு, மந்திரம், தத்துவத்தும், மாயாஜாலம் மற்றும் விஞ்ஞானத்திலும் ஆர்வம் இருக்கும்.

28.    பூடகமான ராசியான விருச்சிக இராசி ஜாதகர்கள்   தத்துவவாதிகளாகவும், மந்திர ஜால நிபுணர்களாகவும், மறைபொருள் தனை உணர்பவர்களாகவும், ஜோதிடர்களாகவும்,  உருவாகிறார்கள். ஒன்றாம்  டமும், பத்தாமிடமும் விருச்சிக இராசியோடு தொடர்பு கொள்ளும் போது மட்டுமே இந்த நிலை  ஏற்படுகிறது.  மேலும்,  லக்னாதிபதி,          10 ம் அதிபதி அல்லது அவர்களின்  நவாம்சம்   விருச்சிகத்தோடு   தொடர்புற   மேலே  சொன்ன  நிலை ஏதுவாகிறது.  கும்ப  லக்ன ஜாதகர்,  லக்னம் பலம் பெறும் போதோ, அல்லது 10 ஆம் இடம் பலம் பெறும் போதோ ஜோதிடராகிறார்.

29.    மிதுனத்தில் சூரியன்,   கன்னியில்  சந்திரன்,  சிம்மத்தில் செவ்வாய் இருக்கச் சிறந்த வானியல் நிபுணர் அல்லது ஜோதிடர் ஆகிறார்.  துலாச் சுக்கிரன், கன்னி புதன் உள்ளுணர்வை அறியும்  சக்தியை  ஏற்படுத்துகிறது. லக்னம் அல்லது 10 ஆம் இடம் விருச்சிகமாகி, சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் விருச்சிகத்தில் இருக்க ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்படும். ரகசிய ராசியான விருச்சிகத்தில், ஜோதிட காரகன் புதன் இருந்து, குரு பார்க்க, உள்ளுணர்வு மிக்கவராகவும், மிகச் சிறந்த ஜோதிடருமாகவும் உருவெடுக்கிறார்.

30.    பாவ முக்கியத்துவம் –

() கேந்திரத்தில் புதன்,  2 ம் அதிபதி பலமிக்கவராக – சிறந்த ஜோதிடர்.
() கேந்திரத்தில் புதன், 2 ல் சுக்கிரன்,3 ல் சந்திரன் அல்லது குரு இருக்க – மிகப் பெரிய ஜோதிடர்.
      () லக்னத்தில் புதன் – கற்றறிந்த வானியலாளர்.
 () 7 ல் புதன் – கற்றறிந்த ஜோதிடர், கணிதர், வானியலாளர்.
      (11 ல் புதன் --  சிறந்த ஜோதிடர்.
 () 4 ல் புதன் அல்லது 10 ல் புதன் அல்லது குருவும், சந்திரனும் இருக்க திறமைமிகு ஜோதிடர்.

       எனவே,  இந்தப் பகுதி மூலமாக, ஜோதிடருக்கான இணைவுகள், நாம் அறிந்திராத , பல  பண்டைய   ஜோதிடர்களின் பெயர்கள், அவர்தம் படைப்புகள் ஆகியவற்றை ல்லாம் அறிந்து  மகிழ்ந்தோம் ல்லவா ?