Showing posts with label தினபூமியில் வெளியானது உங்கள் நட்சத்திர வார பலன்கள்.. Show all posts
Showing posts with label தினபூமியில் வெளியானது உங்கள் நட்சத்திர வார பலன்கள்.. Show all posts

Sunday, April 5, 2015

உங்கள் நட்சத்திர வார பலன்கள்.


சித்திரை - 3 முதல் ரேவதி வரை


துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
        இந்த வாரம்  பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது, நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும்தெய்வீக கைங்கர்யங்களில் ஆர்வம் ஏற்பட்டு தானதருமங்கள் செய்ய முற்படுவீர்கள். அனைத்துப் பணிகளிலும் மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும்.  சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்அரசுப் பணியில் உள்ளவர்கள்  மேல்மட்ட அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால்,  பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்.
சுவாதி
      இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். விரும்பியதெல்லாம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் கட்டாதிருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். சிலருக்கு ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
       இந்த வாரம்  தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள்.  செய்தொழில், வியாபாரம் எதுவானாலும் புதிய திட்டங்கள் தீட்டுவதன் மூலமாக அதிக இலாபங்களை அடைவீர்கள். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். நீண்டநாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி வட இந்திய யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
      இந்த வாரம் துவக்கத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கலாம். பின்னர், கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும்சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான  முயற்சிகள் வெற்றி பெறும்அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்அதைத் தக்க வைக்கக் கடின உழைப்புத் தேவை.
அனுஷம்
       இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.  வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும். உங்கள் உடன்பிறப்புக்களின் தீய நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவதைத் தஙிர்க்க மிகுந்த  எச்சரிக்கையுடன்  இருப்பது அவசியம். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.
கேட்டை
       இந்த வாரம் வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பலவழிகளிலும்  பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். திரைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதுநாள் வரையில் இழுபறியாக இருந்த வழக்குகள் பைசலாகும். முன் கோபத்தைக் குறைத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர் பார்க்கலாம். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம்.

தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
       இந்த வாரம் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய பரிசுத் திட்டங்களை அறிவிப்பீர்கள். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். கடைசி நாளில் கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.
பூராடம்
      இந்த வாரம் இனிய பயணங்கள் மற்றும்  புண்ணியத் தல யாத்திரைகள் நல்ல பலன் அளிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்குத் தக்க ஆதாயம் ஏற்படும். பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.  அந்தஸ்து உயரும். உதவிகரமான புதிய, நல்ல நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் வேலையில் காட்டப்படும் சிரத்தை மற்றும் கடின உழைப்பால் கல்லாக் கட்டுவீர்கள். தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். உறவுகளிடையே ஒற்றுமைக் குறைவால் உறவில் விரிசல்கள் ஏற்படலாம். பதட்டப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானமாகப் போவது நல்லது

உத்திராடம் –1 ஆம் பாதம்
       இந்த வாரம் மதிப்பு, கௌரவம் ஆகியவை உயரும். பருவநிலை காரணமாக சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின்         உதவிகள் கை கொடுக்கும்பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின்  சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
       இந்த வாரம் தங்கள் தனித் திறமைக்கு ஏற்ப பெயரும் புகழும் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது. சிலருக்குப் பணி அல்லது வீடு ஆகிய இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும்பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். எதற்கும் அவசரப்படாதீர்கள். பதறாத காரியம் சிதறாது முடியும் என்பதால், எந்த ஒரு காரியத்தையும் பதட்டமின்றிப் பொறுமையாகச் செய்தால் வெற்றி நிச்சியம். பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும்.
திருவோணம்-
       இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும்புதிய கொள்முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிலருக்குப் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
       இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேகசுகம் குறையும். கடமை உணர்வுமிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும்  வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். பல வகையான உயரக வாகன வசதி அமையும். ணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் ஓரளவு இழப்பைத் தவிர்க்கலாம்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
       இந்த வாரம் மாணவர்கள் கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். வியாபாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். பணியில் முழுக் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் உயிரைக் கொடுத்து உழைத்தாலும், மேலதிகாரி அதில் ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆயினும் சகப் பணியாளர்களின் உதவியால் சமாளித்துவிடுவீர்கள்.
சதயம்-
      இந்த வாரம் உங்கள் கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அரசு வேலையில் அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்கள்  உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்பணவரவு அதிகரிக்கும்வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
       இந்த வாரம் விருந்துகளாலும், கேளிக்கை நிகழ்ச்சிகளாலும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீயகுணமுள்ள நண்பர்களைத் தவிர்த்தால், உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். புதிய தொழில் தொடர்புகளாலும், அரசுவகை ஆதாயங்களாலும் தொழில் மேன்மை அடையும். இதுவரை எட்டாதிருந்த கனிகளெல்லாம் எட்டும். அதாவது நீங்கள் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமுகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்களைத் தவிர்க்கலாம்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
              இந்த வாரம் உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி-
            இந்த வாரம் பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும் எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மதிப்பு உயரும். அதிகாரம் மிக்கப் பதவிகளை அலங்கரிக்கும் நிலைக்கு நீங்கள் உயர்வீர்கள். தொழில் புரிபவர்கள் புதிய எந்திரங்களை வரவழைத்து உற்பத்தியைப் பெருக்கி ஆதாயம் காண்பர். நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பிராயணத்தின் போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.   ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அரசு உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்
ரேவதி-
       இந்த வாரம் மதிப்பு மிக்கப் பெரியோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும். தேவையான நேரத்தில் நண்பர்களின் உதவி கண்டிப்பாகக் கிடைக்கும். சிலரின் சுறுசுறுப்பற்ற நிலையால், காரியத்தடைகள், தாமதங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.



n