Showing posts with label நாடியில் ஜாதக ஆய்வு. Show all posts
Showing posts with label நாடியில் ஜாதக ஆய்வு. Show all posts

Friday, May 11, 2018

நாடியில் ஜாதக ஆய்வு



நாடியில் ஜாதக ஆய்வு



ஜாதகம் - 2

        ஜாதகத்தில்  செவ்வாய் உச்சம் அதற்கு 12 ஆம் வீட்டில் பகைவன் இராகு 2 இல்  மரண அடி மகாதேவர்களாக செவ்வாயின் இரண்டு எதிரிகள் சனியும்  புதனும் உள்ளனர்.  எனவே, ஜாதகருக்கு உதவமுடியாத வகையில் செவ்வாயின் கரங்கள் முழுவதுமாக கட்டப்படுள்ளன.


சூரி
சந், சுக்

கேது
புத, சனி
உ. ஜா. 2

செவ்

இராகு
குரு



         இதன் காரணமாக ஜாதகரின் சகோதரர் மிகப் பெரிய ஆபத்தில்,உயிருக்குப் போராடும் நிலைக்குத்தள்ளப்பட்டார்.  இது ஒரு ஜாதகியானால் அவளின் மற்றுமொரு சகோதரரும், கணவரும் இணைந்து இந்த மாதிரியான துயர நிலையில் இருந்து மீண்டு நல்வாழ்க்கை வாழவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது..
         ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நீசமான போதும் அனுகூலமான, நல்ல நிலையில் கிரகங்கள் இருக்கும் போது நல்ல பலன்களையே அளிக்கின்றன.

ஜாதகம் - 3

         உதாரணமாக ஜாதகம் 3 இல் ஜீவன காரகன் குருநீசம். ஆனால், அவர் ஆத்ம காரகன் சூரியனுடன் இணைந்தள்ளார். எனவே, ஜாதகரின் வாழ்க்கை பிரபஞ்சத்தின் உயர்ந்த ஆத்மாவோடு இணைந்துவிட்டது. அதன் காரணமாக குரு நீசபங்கமாகிறார்.  சூரியனும், சனியும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இது சனி, சூரியன் மகரத்தில் இணைந்து உள்ளதற்கு சமம் ஆகும். (தொழிலும் + வாழ்க்கையும்). இதன் காரணமாக ஜாதகர் வேலையில் தன்னுடன் பணியாற்றும் நண்பரின் உதவியை, முழு ஒத்துழைப்பை பெறுவார். நண்பனால் தன் பணியிடத்தில் இராஜ மரியாதை, ஒத்துழைப்பைப் பெற்று உயர்கிறார். இதற்கு முழுமுதற் காரணமே சனியுடன் பரிவர்தனை பெற்ற சூரியனால் நீசபங்கமான குரு என்பதே உண்மை.       

இராகு





உ. ஜா. 3

குரு,
சூரி
சனி



கேது
சந்

ஜாதகம் - 4
          உதாரண ஜாதகம் - 4  - மகரத்தில் சந்திரன், புதனுடன் இணைந்த குருவும், கும்பத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் உள்ளனர். இந்த 6 கிரகங்களையும் பாகைப்படி வரிசைப்படுத்தும் போது குரு + சந் + புதன் + சுக் + சூரி + செவ் எனவும் அதற்குப் பிறகு இராகுவையும் + சனி + கேது என வரிசைப்படுத்த வேண்டும். இதில் சனி வக்கிரம் பெற்று இராஜகிரகமான சூரியனின் வீட்டில் அமர்ந்து இராகு கேதுக்களுக்கு இடையே மாட்டிக் கொண்டார். ஜீவன் காரகன் குரு வெளியில் உள்ளார்.  இதன் காரணமாக ஜாதகர் தனது வாழ்க்கைக்கான சம்பாத்தியத்தை வெளிநாடு சென்றே ஈட்டுவார் எனத் தீர்மானம் ஆகிறது. இராகு – கேதுவுக்கு இடையே உள்ளது ஒரு நாடு என்றும் அதன் மற்றுமொரு பகுதி வெகு தூரமுள்ள வெறுவொரு நாடு எனவும் தீர்மானிக்க வேண்டும்.  வாழ்க்கையின் முதல் பகுதியில் ஜாதகர் வெளிநாடு சென்று சம்பாதிப்பார்.
         சிம்மத்திலுள்ள வக்ர சனி கும்பத்தில் உள்ள சூரியனுடன் பரிவரத்தனை பெற்றுள்ளார். சூரியன் கௌரவம் மிக்க மனிதரைக் குறிகாட்டும். ஜாதகர் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் போது பெற்றோர்களின் உதவியும், மிகவும் கௌரவம் மிக்க நபரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சனி சகோதரர்களையும் குறிக்கும். ஆதலால், அவரும் தூரதேசத்தில் உள்ளார் எனச் சொல்ல்லாம். சனி, சூரியன் கும்பத்தில் பரிவர்த்தனை ஏற்பட்டு, 12 ஆம் இடமான மகரத்தையும் பார்க்கிறது. நீச குரு ஜாதகரைக் குறிக்கும். அவருக்குக் கிடைக்கும் நண்பனின் ஒத்துழைப்பு, உதவிகளைக் குறிப்பது சனியாகும். இதனால் குருவின் மோசமான விழைவுகள் குறைந்தது. அதுபோல் மகரத்தில் உள்ள குரு கும்பத்திலுள்ள சனியைப் பார்ப்பதால் ஜாதகர் சமூகத்தில் மிகப் பெரிய கௌரவத்தை அடைவார்.
        எந்த ஒரு ஜாதகத்திலும் குருவும், சனியும் அருகருகே உள்ள இரு இராசிகளில் இருக்க ஜாதகர் கௌரவம் மிக்க தொழிலில்  இளமையிலேயே இறங்கிவிடுவார்..



இராகு


செவ், சூரி
சுக்
உ. ஜா. 4

புத,சந்
குரு
சனி(வ)


கேது


         இந்த ஜாதகத்தில் பரிவர்த்தனை காரணமாக சூரியன் சிம்மத்தில், குழந்தையைக் குறிக்கும் சூரியன் இராகு கேதுவுக்கு இடையே இருக்கிறார். இதன் காரணமாக குழந்தைப் பிறப்பு ஏற்படுவதில் சிக்கல்கள் இருக்கும். பிறந்தாலும் உயிரோடு இருப்பது சந்தேகமே. ஜாதகருக்குப் பிறந்த மகனும் சில காலமே உயிரோடு இருந்தான்.
         சுக்கிரன், செவ்வாய், சூரியனுக்கு அடுத்து உள்ளான். இவர்கள் முறையே நெருப்புக்கும், புத்தி கூர்மைக்கும் உரியவர்கள் ஆவர். இரு கிரகங்களுமே நெருப்பை மூலகமாகக் கொண்டவர்கள். சுக்கிரன் மகள், தாயரைக் குறிகாட்டும். அவர்கள் சூரியன், செவ்வாயுடன் கூடும் போது அவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் கெடுவதையும் அதனால் ஏறபடும் கஷ்டங்களையும் குறிக்கிறது. சுக்கிரன் முதல் நட்சத்திர பாதத்தில் அமைந்த்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் அதிக கஷ்டங்கள் இருக்காது.
        இந்த ஜாதகத்தில் கோசார செவ்வாய் கடக இராசிக்கு வரும் போது அவர் , சந்திரன், குரு, புதன் ஆகியோரை பார்வை செய்வார். பரிவர்த்தனையில் உள்ள சனியையும் பார்ப்பார். சனி, செவ்வாய் பகைவர்கள்.  சனி கர்மகாரகன். எனவே ஜாதகர் தொழிலில் வழக்கு விவகாரங்கள், பகைவர்கள் தொல்லை, கீழே விழுவதனால் ஏற்படும் காயங்கள் என பல வழிகளிலும் தொல்லைகளை அனுபவித்தார்.
        கோசார சனி மகரத்தைத் தொடும் போது, அதிலுள்ள குரு, சந்திரன், புதன் ஆகியோரில் முதலில் குருவைக் கடக்கும் போது ஜாதகருக்கு சமூகத்தில் கௌரவம் மிக்க பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பும், உதவிகளும் கிடைக்கும். பிறகு சந்திரனைக் கடக்கும் போது பிறரை வஞ்சிக்கும் கலையை கற்கிறார். இறுதியாக புதனை கடக்கும் போது ஜாதகரை தொழிலில் ஆர்வத்தைக் கொடுக்கிறது.
        சுருக்கமாகக் கூறினால் கோசார சனி மகரத்தைக் கடக்கும் போது ஜாதகர் கௌரவமான மனிதர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன், நிச்சியம் இல்லாத, நம்பிக்கையில்லாத, சந்தேக மனதுடன் வர்த்தகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொண்டார்.
        கோசார சனி கும்பத்தை கடக்கும் போது முதலில் செல்வத்துக்குக் குறிகாட்டியான சுக்கிரனைத் தொடுகிறார். இதன் காரணமாக அவரின் 43 முதல் 45 வயதுகளில் பிறரின் பணங்கள் இவர் கைக்கு வந்து சேர்கிறது.