Showing posts with label மருத்துவ ஜோதிடமும். Show all posts
Showing posts with label மருத்துவ ஜோதிடமும். Show all posts

Sunday, January 18, 2015

மருத்துவ ஜோதிடமும்,மனித வாழ்வும் !





மருத்துவ ஜோதிடமும்,மனித வாழ்வும் !

      ஜோதிடத்தால், நிச்சியமாக  நமது  அன்றாட   வாழ்க்கையில்  ஏற்படும் உடல்  உபாதைகளை எடுத்துக் கூறுவதோடு,அதற்கான நமது  ஜாதகத்தில்  உள்ள, சம்பந்தப் பட்ட மோசமான கிரகங்களின் அசுபத்தன்மைகளை குறைக்க பரிகாரபூஜைகள் செய்து  தங்கள்  நோய்களை தீர்த்துக் கொள்ளவும்  முடியும் என்றால் மிகையாகாது.  ஒருவ ரின் உடலை எவ்வித பரிசோதனைக்கும், உட்படுத்தாமல், அவருக்கு  ஏற்படப்பொகும் நோயைக் கிரக நிலைகள்  மூலம்  ஜாதகருக்கு நோய் எப்போது ஏற்படும், எந்த உறுப் பில் ஏற்படும், நோயின் தன்மை என்ன,  என்பதையெல்லாம்,  அது ஏற்படுத்துவதற்கு முன்பே அறிந்து கூறமுடியும். ஆனால், மருத்துவம் எனும் விஞ்ஞானத்தில் நோயாளி யை பரிசோதனை செய்யாமல்  மருத்துவரால்  எதையும்  சொல்ல முடியாது.எனவே மருத்துவ விஞ்ஞானத்தைவிட,ஜோதிட விஞ்ஞானமே மேலானது.இவை  இரண்டுமே இணைந்து செயல்பட்டால் மனிதகுலத்தின் உடலாரோக்கியம்  மேம்படு மல்லவா ?

      அதனால்,  தெய்வீக அர்பணத்துடன், கடமை யுணர்வுடன் இவர்கள் இணைந்து, மனித ஆரோக்கியத்தை பாதுகாக்க   முற்படவேண்டும். அப்போது தான், கிரகங்களின்  கதிர்வீச்சால்  மனிதனுக்கு   ஏற்படும்   நோய்  பாதிப்புக்களிலிருந்து அவன் விடுபட முடியும்.

      மனிதனின் ஆரோக்கியத் தன்மையை,ஜோதிடத்தின் மூலமாக ஆராயத் தேவை யான காரணிகளாவன :-

 1.  இலக்னம் மற்றும் இலக்னாதிபதி.
2.  சூரியன்,சந்திரன் மற்றும் புதன்.
3.  ஆறாம் பாவம் மற்றும் அதன் அதிபதி.
4.  இலக்னம் மற்றும் ஆறாம் பாவத்திற்கான காரகர்.
5.  கன்னிராசி,எட்டாம் பாவம்,பன்னிரெண்டாம் பாவம் மற்றும் அதன் அதிபதி
    கள்.
6.  நடப்பு தசா,புத்தி மற்றும் கோசாரநிலைகள்.

முக்கியமாக  ஒவ்வொரு  இராசியும், கிரகமும் மற்றும் பாவங்களும் ஒரு ஜாதகரின் ஆரோக்கியம்  பற்றிய பலனறிய சோதிக்கப்பட வேண்டும்.ஏனெனில், இவை அனைத் துமே, மனித உடலின்,ஏதாவதுவொரு பாகத்தை ஆளுகின்றன.

      உதாரணமாக,சந்திரன்,ஆண்களுக்கு இடதுகண்ணையும்,மார்பகத்தையும், வயிறு, கருப்பை, கருமுட்டைகள், சிறுநீரகம் மற்றும் மனதையும்,உணர்வுகளையும் ஆளுகின் றன.ஐந்தாம் பாவத்தை எடுத்துக்கொண்டால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளையும், மேஷராசி தலையையும் ஆள்கிறது. இதனால் ஏதாவது ஒரு ராசி/கிரகம்/பாவம்/ மோச மாக பாதிக்கப்பட்டால்,இதிலுள்ள பலகாரணிகள் நல்ஆரோக்கியத்தையும்,பலத்தையும் உடைத்தாயிருந்தாலும், ஜாதகருக்கு  ஏதாவது  ஒரு காரகத்தின் காரணமாக, உடலின் ஏதாவது ஒரு பாகத்தில்,நோய் ஏற்படுவது உறுதியாம்.

      பொதுவாக, ஜாதகரின்  இலக்னம், அவரின் உடலமைப்பை ஆள்கிறது. ஆனால், நாம் இலக்னம்தான், ஜாதகரின் முழு உடலையும் ஆள்கிறதென்று எடுத்துக்கொள்வது தவறான முடிவாகும். சந்திரன் மனதையும், இலக்னம்  உடலையும், சூரியன் ஆன்மா வையும் ஆளுவதோடு மட்டுமல்லாமல், இலக்னாதிபதி,  அதன் காரகன் சூரியன் ஆகி யோர் , மனிதனுக்கு  அன்றாடம்  ஏற்படும்  உடல் உபாதைகள் மற்றும் அதனாலான கஷ்டங்களையும் அளிக்கின்றன.  எனவேதான், இலக்னம்,மனித உடலின் அனைத்துப் பகுதிகளையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்,மூளையை தன்னகத்தே கொண் டுள்ளது.

      ஆகையால், இலக்னம், இலக்னதிபதி அதன் காரகர்கள்,பலமிக்கவர்களாக, பாதிப் படையாமல்  இருந்தால்  ஜாதகர்  உடலமைப்பில்,அன்றன்றைக்கு ஏற்படும் உபாதை   களினால் எவ்விதக்  கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ளும் நல்ல உடல் ஆரோக்கியத் துடன் திகழ்வார்  என்பது உறுதியாகிறது.ஜாதகருக்கு அன்றாடம் ஏற்படும் பருவகால நோய்களான ஜலதோஷம்,சளி,இருமல்,வைரஸ் காய்ச்சல்,தோல்நோய்போன்றவற்றை தாங்கிக் கொள்ளும்  சக்தி  மற்றும்  எதிர்கொள்ளும்  எதிர்ப்பு  சக்தியும்   இருக்கும்.   

      பொதுவாக  ஜாதகத்தில் பலம் மிக்க,  பாதிக்கப்படாத சூரியன் இருக்க, ஜாதகர் நல்ல பலமிக்க  இருதயத்தை  உடையவராக  இருப்பார்.அதன் காரணமாக அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும்.ஆனால்,இயற்கை அசுபர்களான செவ்வாய்,சனி, இராகு  மற்றும்  கேது  ஆகியோர்  இலக்னத்திலோ  அல்லது  இலக்னதிபதியகவோ மற்றும் ஆறு,எட்டு,பன்னிரெண்டில் சூரியன் இருந்து,அப்பாவகங்கள்,பாதிக்கப்பட்டலோ ஜாதகர். தொடர்ந்து  ஆரோக்கியத்துடன் இருக்கமாட்டார்.  இதன் காரணமாக அவருக்கு நோய் எதிர்ப்பு  சக்தியின்றி , நிவாரணமும்   மெதுவாகவே    ஏற்படுகிறது.  

      பொதுவாகவே சந்திரனும், புதனும் இயற்கை அசுபர்களின் சிறிதளவு தாக்கத்தைக்கூட தாங்கமுடியா தவர்கள். எனவே,  கடக, கன்னி இராசிகளைக் இலக்னமாகக் கொண்டவர்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.எனவே, இவர்கள்,தங்கள் உணவு விஷ யத்தில் கட்டுபாட்டுடனும்,  தங்கள் உடலைப் பேணிக்காப்பதில் அக்கறை  எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால்,   இயற்கை சுபர்களான குரு, சூரியன், புதன் மற்றும் சுக்கி ரன் ஆகியோரின் தாக்கம் அதிகரிக்க அவர்கள் நிச்சியமாக  ஆரோக்கியமாக வாழ்வர். மனநிலையை சந்திரனும்,நரம்புமண்டலத்தை புதனும்,இதயத்தை சூரியனும் ஆள்கின் றனர். இவர்களிடையேயான சுமுகவுறவு,  இலக்னம்  பலமிழந்த நிலையிலும், ஜாதக ருக்கு நல்ஆரோக்கியத்தை அளிகின்றன.இதன் காரணமாக,ஜாதகர் ஒருஒழுங்குமுறை யுடன் கூடிய வாழ்க்கையும்,அதிகமாக உண்பதையும்,குடிப்பதையும் தவிர்ப்பவராகவும் இருப்பார். மனிதனுக்கு   அவனது ஜாதகத்தில் அனுகூலமான கிரகநிலைகள் அமைந் தால் அவன் சீரான வாழ்க்கைவாழ்வான். 

      அடுத்து 6 ம் பாவம், அதன்  அதிபதி, அதன் காரக்கிரகம் சனி  ஆகியோரே,ஜாத கரின், பொதுவான  உடல்நலத்தைச் சிதைப்பவர்கள் ஆவர்.6 ம் பாவம் நேர்மறையான மற்றும்  எதிர்மறையான காரகத்துவங்களைக் கொண்டது.அவை,கடன்-நோய்-எதிரிகள்- தாய்வழிச் சொந்தம். ஜீரண  உறுப்புகள்  ஆகும்.   மேற்சொன்ன மூவரும் பலமுடன் இருந்தால்,  நேர்மறையான  காரகங்கள்  பெருகும். அதாவது,ஜீரண உறுப்புகள் நல்ல முறையில் இயங்க,உடல் நிலை சீராக,ஆரோக்கியமாக இருக்கும். பலமிழந்து காணப் பட்டால் எதிர்மறை காரகங்கள் தடைபடுகின்றன. ஜாதகர்  கடன்,நோய் மற்றும் எதிரி கள் பற்றி எந்தக் கவலையும்படாமல்,தெனாவெட்டாக இருப்பார்.

      ஆனால், இலக்னபாவம், அதன்அதிபதி,சூரியன்,சந்திரன்,புதன் ஆகியோர் ஆறாம் பாவதோடு,அதன் அதிபதியோடு,காரகர் சனியோடு தொடர்புகொண்டு ,,அல்லது அப்படி யே மாறி,அசுப தாக்கங்களும் ஏற்பட்டால், தொடர்பு எப்படிப்பட்ட நிலையிலும் ஏற்பட் டாலும் மிகச்சிக்கலான உடல் நிலையே காணப்படும். இதில்,  நோயின்அளவு மற்றும் தன்மையானது, சம்பந்தப்பட்ட  கிரகங்களின்   தொடர்பின் தன்மையைப் பொருத்தும் அமையும். உதாரணமாக,  சிம்மலக்னமாகி இலக்னாதிபதிசூரியன் மற்றும் சனி,ஆறாம் அதிபதி  இவர்களுக்கிடையேயான தொடர்பு (இவர்கள் இருவருமே அந்த பாவங்களுக் கான காரகர்கள் ஆவர்.) ஜாதகருக்கு ஆரோக்கிய பாதிப்புக்குக் காரணமாகலாம்.இராகு, கேது இவர்களால், மேலும்  பாதிக்கப்பட்டால்,  கண் கோளாறு ,இதயபாதிப்பு அல்லது எலும்பில்  பாதிப்பு   ஆகியவை   ஏற்படலாம். ஜாதகருக்கு நோய்  எதிர்ப்பு சக்தியும் குறையும்.

      ஆனால்,சிம்மலக்ன ஜாதகருக்கு,  இருதயநோய் கண்டிப்பாக வருமா ?வராதா ? என்பதை அறிய விரும்பினால்,சந்திரனையும்,கடகராசியையும்,நான்காம் பாவத்தையும் மற்றும்  அதன் அதிபதி ஆகியோரின் நிலைகளையும் கண்டிப்பாகக் கருத்திற்கொள்ள வதோடு , இரத்தகாரகன் செவ்வாயின் நிலையையும் அறியவேண்டும்.மேலும் ,இவை, ஆறாம் இடம், பாவகாரகன், அதிபதி  ஆகியோர்   பாதிக்கப்பட்டிருந்தால், ஜாதகருக்கு கண்டிப்பாக இதயத்தில் ஏதாவதொரு நோய் ஏற்படுவது உறுதியாகும்.

     ஒரு ஜாதகருக்கு எந்த உறுப்பில்,என்னவிதமான நோய் வந்து இன்னலடைவார். என்பதை அறிய, எந்தராசி, காலபுருஷனுக்கு  எந்த  பாவம்,   உடலின் எப்பகுதியைக் குறிக்கிறது  எனத்  தெரிந்துகொள்ள   வேண்டியது   அவசியமாகின்றது.அந்த இராசி, பாவம், அதன் அதிபதி (ஜாதகத்தில்) ஆகியோர் பாதி்க்கப்பட்டு,பலமுமிழந்தால் மற்றும் ஆறாம் பாவம்,  அதன்  அதிபதி, காரகர் சனி ஆகியோரின் அனுகூலமற்ற தொடர்பும் ஏற்பட்டால் ,சம்பந்தப்பட்ட கிரகதசா, புத்தி  காலங்களில், குறிப்பிட்ட அந்த பாகத்தில் நோய்ஏற்பட்டு அவதிக்கு ஆளாவார்.இந்தத் தொடர்பில்,செவ்வாய்,சனி, மற்றும் இராகு வும் கைகோர்த்தால்,இன்னநோய் என்று எளிதில் இனங்காணமுடியாது.அத்துடன் அது மிகவும்  மோசமான  நோயாகவும்  இருக்கலாம். செவ்வாய், சனி  தொடர்பு   எனில் எளிதில் தீராதநோயைத்தரும். சனி நோயிலிருந்து தாமதமான விடுதலையைத் தரும். இன்னநோய் எனக்கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இராகு நோயை மறைத்து விடும்.

     எட்டு  மற்றும்  பன்னிரண்டாம்  பாவம்,அவற்றின் அதிபதிகள்,பாதிப்படைந்தால், குறிப்பிட்ட  பாகத்திற்கு  நோய்தந்து,  கெடுதலையும், கஷ்டங்களையும்  ஜாதகருக்கு அள்ளித்தரும்.  எட்டாம்  பாவம்  மரணத்தைக் குறிக்கிறது.அதுவே மிகஉயர்ந்த உடற் கஷ்டமல்லவா? அதையேதான் எட்டாம் பாவாதிபதியும் தருகிறார்.

     12 ம் பாவம், ஆஸ்பத்திரியைக் குறிக்கும்.அது பாதிப்படைந்தால் ஜாதகர் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்படுவார். இலக்னத்தோடு,அதிபதியோடு,இவர்கள் தொடர்புகொண் டு பாதிப்படையும்போது  உடல்  மற்றும் மனபாதிப்பு ஏற்படுகிறது.‍‌துர்ஸ்தானங்களான ஆறு, எட்டு, பன்னிரெண்டாம்  பாவங்களுக்கு சனியே காரகர் ஆவார்.எனவே,சனிதான் ஒரு ஜாதகத்தில்  உடல்  மற்றும்  உள்ளத்தால் ஏற்படும் கஷ்டங்களுக்குக் காரணமா கிறான்.அதுவும்,சனி ஆறு,எட்டு,பன்னிரெண்டாம் பாவங்களின் பாவாதிபதியாகும்போது சனியின் தொடர்பு,எந்த பாவத்துடன்,அதிபதியுடன் ஏற்படுகிறதோ அந்த தொடர்புடைய உடற்பாகத்தில் பிரச்சினையை உருவாக்கும்.

     உச்சகிரகம் மிகவும் சக்திவாய்ந்ததென  நாம் அறிவோம்.ஆனால், நீசகிரகமானது மிகவும் ஆபத்தைவிளைவிக்கக் கூடியதாகும். சூரியன்,  எதிர்ப்பு சக்தியையும், வீரியத் தையும் ஆள்கிறான். துர்ஸ்தானங்களைத்   தவிர   மற்ற    பாவங்களுக்கு மட்டுமே இவற்றைத் தருகிறான். அவன்  பலம் பொருந்தியவனாக  இருக்க ஜாதகருக்கு உடல் பலத்தை அளித்து, நோய் வந்தால் விரைவில் குணமடையச் செய்கிறான்.நோய் தீவிர மாக இருந்தாலும்,ஜாதகருக்கு மனோ பயம்போக்குவதுடன்,தைரியத்தை அளிக்கிறான்.

     சனியோ, துர்ஸ்தானங்களில்  இடம்பெறாமலிருந்து,பலம்மிக்கவனாக இருந்தால் கருணைமிக்கவனாகிறான்.அதன் காரணமாக.துர்ஸ்தானங்களில் இருந்து பாதிப்படைந் தால் மட்டுமே,நோயின் தன்மையைக் கூட்டி விடுகிறான்.உச்சசனி இரக்கம் மிக்கவன். கருணையை மிகவும் குறைத்துக் கொள்பவன் வக்கிர சனியாவான்.

     இலக்னம்  மற்றும்  6 ம்  பாவத்திற்குரியகாரகர்களான,சூரியனும்,சனியும் 3 – 11 லிலோ அல்லது 5 – 9 லிலோ,இருக்க,இது மிக்க நன்மைதரும் நிலைகளாகும்.ஆனால், இவை  இணைவு  கொண்டாலோ அல்லது பரஸ்பரபார்வை செய்தாலோ,கெடுதலைச் செய்கின்றன.

     அனுகூலமற்ற சந்திரன்  ஆஸ்மா, நுரையீரல் பாதிப்பு,வயிற்றுப் போக்கு,புண்கள், கட்டிகள்,ஜன்னி போன்றவற்றிற்குக் காரணமாகின்றான்.

     இவ்விதமான நோய்கள்,அந்தந்த கிரகதசா–புத்திகளில் மட்டுமே பாதிப்பைத்தரும். எனவே,  அந்த  புத்திவரும்  போது, அந்த கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால்,அந்தப் பகுதி நோய்க்கான சிகிச்சைகளை முன்னேற்பாடாகக் கையாண்டு குணம்பெறலாம்.நோயின், பரிணாமத்தை புத்தி அதிபதியின் நிலையைப்பொருத்து அறியலாம்.

     அதேபோல் கோசாரத்தில் செவ்வாய்,சனி,மற்றும் இராகுவின் நிலை உன்னிப்பாக அறியப்படவேண்டும்.  ஏனெனில், அவற்றின் கோசாரநிலைகள் பல்வேறு உடல் பகுதி யில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இங்கு,கோசாரநிலைகள் இலக்னத்திலிருந்தே பார்க்கப் படவேண்டும்.வழக்கம்போல் சந்திரனிலிருந்து பார்க்கக்கூடாது.சனியின் கோசாரநிலை ஜாதகருக்கு இன்னல்களைத் தருகிறது.செவ்வாய்,காயங்களையும்,தொற்றுநோய் களை யும் தருகிறது. இலக்னம், ஆறாமிடம்,எட்டு,பன்னிரெண்டாமிடம் இவற்றில் செவ்வாய் வரும் நிலையை உதாசீனப் படுத்திவிடக்கூடாது. செவ்வாய், சனி,இராகுவின் கோசார நகர்வு,நடப்பு புத்தி அதிபதியின் மீது வரும்போது, மிகஅதிகமான நோயின் தாக்கத்தை அளிக்கிறது.அந்த நோய் மிகவும் வலிமிக்கதாக அமைந்துவிடுகிறது.

     இயற்கை அசுப கிரக தாக்கத்தால் ஏற்படும் உடல் அளவிலான அல்லது மனதள விலான நோயின் அளவு மிகவும் அதிகமாகவும்,இயற்கை சுபரின் தாக்கம் குறைவாக வும் இருக்கும்.

     நட்சத்திராதிபதி பலம்மிக்கவராக இருப்பின்,நோயின் தாக்கம் குறைவாகவும், பல மற்று,பாதிப்புடையதாயின் தாக்கம் அதிகமாகவும் இருக்கும்.பூரண உடல் நலமுடைய ஒரு ஜாதகரின்,ஜாதக நிலையைப் பார்ப்போமா ?

     இந்த ஜாதகர் பூரண உடல் நலத்துடன் உள்ளார் . ஏனெனில்,இலக்னாதிபதி புதன்  11 ல்,5,12 குடைய சுக்கிரன் 3 ம் அதிபதி   சூரியனோடும்   இணைந்துள்ளார். சுக்கிரன் மற்றும் சூரியன், புதனின் நண்பர்கள். புதன்  மீது  எந்தவிதமான  அசுப தாக்கங்களும் இல்லை. 6,11 க்குரிய  செவ்வாயும், 8,9 க்குரிய  சனியும்  இணைவு.அவர்களின் அசுப தாக்கம் குறைவானது. ஏனெனில், செவ்வாய்  இலக்னத்தின் மையப்புள்ளி யிலிருந்து விலகியுள்ளார்.சனியும் பாகைநிலையில் பின்னால் உள்ளார். காரகன்  சூரியன் உச்சம் பெற்று எவ்விதஅசுப தாக்கமின்றி உள்ளார். சந்திரன்  பலமாக  உள்ளார்.சனியின் 3 ம் பார்வை அவருக்கு நல்ல பார்வையாகவே உள்ளது.




புதன் சூரி
சுக்

லக்///செவ் சனி


கேது 



செவ் சுக்

சந்

 
   இராசி
குரு இராகு

குரு
நவாம்சம்


  கேது

சந்
















லக்///

சனி
சூரி,புத
இராகு

பிறந்த தேதி 02 05 1944 ,நேரம்- காலை 08 -- 34   
                   
தசாயிருப்பு : கேது 2 வரு 02 மா 11 நாள்.

சந்திரனுக்கு  இடங்கோடுத்த   சூரியன்  உச்சம்  பெற்றுள்ளார். சந்திரன்,சூரியன்,புதன் ஆகியோரின்  நிலை  இணக்கமாக உள்ளது. 6 ம் பாவதிபதி செவ்வாய் இலக்னத்தில், 6 ம் பாவகாரகன் மற்றும் 8 மிடத்து  அதிபதியான  சனியும்  இலக்னத்தில்  உள்ளார். ஜாதகருக்கு எப்போதாவது சிறுசிறு உடல்  உபாதைகளை  மட்டும் இவர்கள் தருவார் கள்.

     செவ்வாய்தசா ஜாதகருக்கு எவ்வித கஷ்டங்களும் தரவில்லை .இராகு தசாவில், அவர் ஓரளவு துயரங்களைச் சந்த்தித்தார். ஏனெனில் இராகு 2 ல் ,7 – 10 க்கு உடைய குருவுடன் இணைந்துள்ளார். 2 – 7 ம் மாரக ஸ்தானங்கள்.   மேலும், 8 – 9 க் குடைய                மற்றும்  6 பாவகாரகர் சனியின் நட்சத்திரத்தில் இராகு உள்ளார்.  சனியின் மூலமாக, இராகு தன் செயல்களைச் செயல் படுத்துவார்.இதன் காரணமாக  ஜாதகர் உடல் வலி, சளி,மற்றும் பல்வலி போன்ற உபாதைகளால் தொல்லைகளை அனுபவித்தார்.

     ஆனாலும் பொதுவாக,நல் ஆரோக்கியமத்துக்கான கிரக நிலைகள் பலமிக்கதாக உள்ளதால் , ஜாதகர்  தனது   இறுதிக்   காலம்வரை,  ஆரோக்கியமான  உடலுடன் நன்றாகவே வாழ்ந்தாரெனலாம்.