Showing posts with label லால் கிதாப். Show all posts
Showing posts with label லால் கிதாப். Show all posts

Wednesday, January 27, 2016

லால் கிதாப்


லால் கிதாப் 

லால் கிதாப் – முன்னேற்றத்துக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான பொதுவான பரிகாரகங்கள் –
# தினமும் சாப்பிடும் முன் சிறிது உணவினை மூன்று பங்காக வைத்து, சாப்பிட்ட பின் பசு, நாய் மற்றும் காக்கைக்கு வைக்கவும்.
# திடீர் அதிர்ச்சிகள், வீண் செலவுகள் போன்ற இராகுவின் பாதிப்பை முழுவதுமாக கட்டுப்படுத்த, எப்போதும் சமையலறையிலேயே உணவருந்துதல் வேண்டும்.
# ஒவ்வொரு மாதமும், வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 3, 4 அதிகமான இனிப்புப் பலகாரங்களைத் தயாரித்து அதை பசு, எருது அல்லது ஏதேனும் ஒரு மிருகத்துக்கு அளிக்கவும்.
# இரவு தூங்கும் போது ஒரு குவளையில் நீர் அல்லது பாலை தலைக்கு அருகே வைத்து, காலையில் எழுந்ததும் அதை மரம், செடிகளுக்கு ஊற்றினால், வீட்டில் சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள், விபத்துகள், அசிங்க அவமானங்கள், ஆரோக்கியக் குறைவுகள் ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
நோய் பாதிப்புக்கள் குறைய அல்லது தவிர்ப்பதற்கான லால்கிதாப் பரிகாரங்கள்.
# ஒவ்வொரு வருடமும் சிகப்பு பூசணிக்காயை கோவிலுக்கு தானமாக வழங்கவும்.
.# இரவு படுக்கும் போது சில காசுகளை தலையணைக்கு அடியில் வைத்து, காலையில் ஏழைகளுக்கு வழங்கவும்.
# சுடுகாடு வழியாக செல்ல நேரும் போது ரூபாய் நாணயத்தை விட்டுச் செல்லவும்.