Showing posts with label 19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- தினபூமியில்.. Show all posts
Showing posts with label 19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- தினபூமியில்.. Show all posts

Sunday, April 19, 2015

19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- தினபூமியில்.


தினபூமி
உங்கள் நட்சத்திர பலன்கள்.
19 – 04 – 2015 முதல் 25 - 04 – 2015 வரை

சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
      இந்த வாரம் நீங்கள் முக்கிய விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும்  சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். உங்கள் தேவை அறிந்து, நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும்
பூரம்
       இந்த வாரம் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள்யாவும் வெற்றிகரமாக முடியும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின்   ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்பணிபுரியும் பெண்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கைச் சுலபமாக அடைவீர்கள். உங்களுக்கு தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.
உத்திரம்- 1 பாதம்
       இந்த வாரம் சிலருக்குப் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். அதன் காரணமாகச் செலவுகள் கூடி, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்சிலருக்குப் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
      இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக ஞானத்தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பரிபூர்ண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும்சுபகாரியச் செலவுகள் ஏற்படும்புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம்,  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.

ஹஸ்தம்
       இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். எண்ணிய எண்ணங்கள்யாவும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத தனவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முனேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
       இந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும், வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
       இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். அரசுப்பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்பட்டுக் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். ஞானிகள் மற்றும் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும்.
சுவாதி
      இந்த வாரம் மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.  அதன் காரணமாக தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சில மாணவர்கள் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவார்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
       இந்த வாரம் திருமணம் கைகூடி வரும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பால் மட்டுமே நல்ல இலாபமோ, அதிக பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
       இந்த வாரம் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். ஏமாற்றத்தைத் தவிர்க்க வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு.   பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாகக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.
அனுஷம்
       இந்த வாரம் பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். தங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
கேட்டை
     இந்த வாரம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். வாழ்க்கையில்  எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். ஆனால், சிலருக்கு எல்லா விஷயத்திலும் ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். உயர்ந்த மனிதர்களின் நட்புக் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் உழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும்.